பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் காவல்துறை என்றால் ஏழை மக்கள் எங்கே செல்வார்கள்?- உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி

By கி.மகாராஜன்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் மணல் மாஃபியாக்களுக்கு பாதுகாப்பாக உள்ளனர். பணக்காரர்களுக்கு மட்டும் தான் காவல்துறை என்றால் ஏழை மக்கள் எங்கே செல்வார்கள் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதில் மணல் கடத்தலை தடுக்கக்கோரியும், சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பாலகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரருக்கு கொலை மிரட்டல் வருவதால், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வழக்கறிஞர் நீதிபதிகளிடம் கேட்டுக்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் காணொலி காட்சியில் ஆஜராகினர்.

அப்போது நீதிபதிகள், மணல் கொள்ளை குறித்து வழக்கு தொடர்ந்த மனுதாரரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் அவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. அதன் பிறகும் மனுதாரருக்கு பாதுகாப்பு வழங்காதது ஏன்? நீதிமன்றம் உத்தரவிட்டும் ஒருவருக்கு பாதுகாப்பு வழங்காததில் இருந்து நீதிமன்றத்தின் உத்தரவை போலீஸார் எந்த அளவிற்கு மதிக்கிறார்கள் என்பது தெரிகிறது.

தூத்துக்குடி மாவட்ட போலீஸார் என்றாலே, மக்கள் மனதில் ஒரு வடு இன்னும் உள்ளது. அந்த வடு இன்னும் அகற்றப்படவில்லை. சாத்தான்குளம் சம்பவத்தையடுத்து தூத்துக்குடி மாவட்ட போலீஸார் தன் போக்கை மாற்றவில்லை என்பது தெரிகிறது.

இந்தச் சூழலில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டால் தூத்துக்குடி போலீஸார் மணல் மாபியாக்களுக்கு பாதுகாப்பாக செயல்படுகிறது. பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் காவல்துறை என்றால் ஏழை மக்கள் எங்கே செல்வார்கள்? நீதிமன்ற உத்தரவை மீற போலீஸாருக்கு என்ன தைரியம்? என்றனர்.

பின்னர் மனுதாரருக்கு பாதுகாப்பு வழங்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்