தமிழகத்தில் கரோனா கட்டுக்குள் இருக்கிறது; ஆனால் இன்னும் மூன்று சவால்கள் இருக்கின்றன: அமைச்சர் விஜயபாஸ்கர்

By எஸ்.ஸ்ரீனிவாசகன்

தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. இருப்பினும், சவாலான இந்த காலகட்டத்தில் முகக்கவசம் அணிவதால் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளல்லாம் என சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "கரோனா தொற்று மற்ற மாநிலங்களை விடத் தமிழகத்தில் குறைவாகவே உள்ளது. முதல்வரின் நடவடிக்கையால் கரோனா பரவல் தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது.

கரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும் தமிழக மக்கள் இன்னும் மூன்று சவால்களைக் கடக்க வேண்டியுள்ளது. அவை, தற்போது நிலவும் வடகிழக்குப் பருவமழை காலம், அதனைத் தொடர்ந்து வரும் குளிர் காலம் மற்றும் பண்டிகை காலங்கள். இந்த சவாலான காலங்களில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசங்களை கட்டாயமாக அணிந்து கொள்வது நல்லது. இதன் மூலம் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்" எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்