தமிழகத்தின் சராசரி மழையளவு 823 மிமீ. நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்த சராசரியை விட அதிகளவு மழை பெய்யும். அந்த இரு மாவட்டங்களையும் தவிர்த்து, தமிழகத்தில் சராசரியாக தற்போது 712 மிமீ மட்டுமே மழை பெய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மழையளவு குறைந்து கொண்டே வருகிறது.
இந்தியாவில் மழை குறைவான மாநிலங்களில் ராஜஸ்தான் முதலி டத்திலும் தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் அக். 20-ம் தேதி தொடங்க வேண்டும். தற்போது வரை, வடகிழக்குப் பருவமழை முழுமையாகத் தொடங்கவில்லை.
தற்போதைய மழைப்பொழிவு குறைவால் குடிநீருக்கும், விவசா யத்துக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ‘திரவத் தங்கம்’ என அழைக்கும் அளவுக்கு தண்ணீரின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது.
30% தண்ணீர் பற்றாக்குறை
இதுகுறித்து மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் விவ சாய விஞ்ஞானி வீரபுத்திரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
உலக மக்கள் தொகையில் இந் தியா 16 சதவீதமும், பரப்பளவில் 2.4 சதவீதமும் கொண்டுள்ளது. ஆனால், உலகின் மொத்த தண் ணீரில் 4 சதவீதம் மட்டுமே இந்தியா கொண்டிருக்கிறது. தமிழ்நாடு இந்திய மக்கள் தொகையில் 7 சதவீதமும், பரப்பளவில் 4 சத வீதம் இருந்தாலும் நீர் ஆதாரங்கள் 3 சதவீதமும் மட்டுமே உள்ளது. கடந்த 60 ஆண்டுகளில், தமிழகத் தில் ஏரிகளின் பாசனப் பரப்பு குறைந்த நிலையில், கிணறுகளின் பாசனப் பரப்பளவு மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் தற்போதைய நீரின் அளவு 4.74 மில்லியன் ஹெக்டேர் மீட்டர் (47 லட்சத்து 40 ஆயிரம் கோடி லிட்டர்) என்றும், எதிர்வரும் 2025-ம் ஆண் டின் நீர்த்தேவை 6.20 மில்லியன் ஹெக்டேர் மீட்டர் (62 லட்சத்து 20 ஆயிரம் கோடி லிட்டர்) என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் பதினைந்து ஆண்டுகளில் 30 சத வீதம் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் என்றும் புள்ளி விவரங்கள் எச்சரிக் கின்றன.
தண்ணீர் பட்ஜெட் தயாரித்தல்
பட்ஜெட் வரவு செலவைப் போல தண்ணீரையும் திட்டமிட்டு செம்மையான முறையில் மேலாண்மை செய்ய வேண்டும். ஆனால், பொருளாதாரத்துக்கு பட்ஜெட் தயாரிக்கும் நாம், நமது அரசுகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும் தண்ணீர் ஆதா ரத்தை பெருக்கவும் தண்ணீர் நிலை அறிக்கை (பட்ஜெட்) தயார் செய்வதில்லை. அந்த தண்ணீர் நிலை அறிக்கையை கடைபிடிக்கா ததால், தற்போது தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஒரு கிராமத்தின் நீர்வளங்களை தெரிந்துகொள்ள முதலில் பல் துறை அதிகாரிகள், அறிவியலாளர் கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஊர்ப் பெரியவர்கள் மூலம் ஆறுகள், ஏரிகள், குளங்கள், ஊருணிகள், நீர் சேமிப்பு அமைப் புகள் ஆகியவற்றை குறித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நீர் ஆதாரங்களின் கொள்ளளவை கணக்கிட வேண்டும். பின்னர் நடைமுறையில் பயிரிடப்படும் பயிர்கள், மண் தன்மை, மழை அளவு, கிராமத்தின் மக்கள் தொகை, கால்நடைகள் போன்ற அடிப்படை விவரங்களைச் சேகரித் துக் கொள்ள வேண்டும்.
ஒரு நாளுக்கு ஒரு மனிதனின் நீர்த் தேவை சுமார் 60 லிட்டர் மற்றும் விலங்குகளுக்கு 100 லிட்டர் ஆகும். இதைப் போல, ஒவ்வொரு பயிருக்கும் நீர்த் தேவையை கணக் கிட்டு மொத்தமாக ஓராண்டுக்கு பயிர்களின் நீர்த்தேவையைக் கணக்கிடலாம். இதனடிப்படையில் ஒரு கிராமத்தின், நகரின், மாநிலத் தின், நாட்டின் நீர்வரவு மற்றும் நீர்த்தேவையைக் கணக்கிடுவதே தண்ணீர் பட்ஜெட் ஆகும். இந்த தண்ணீர் பட்ஜெட்டை முதலில் தயாரித்துக் கொள்ள வேண்டும். முதற்கட்டமாக இதுபற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நீர் செறிவூட்டல், தூர்வாருதல், வடிகால் வசதி, கசிவுநீர் பண்ணைக் குட்டைகள், தடுப்பணை அமைத் தல் போன்ற முறைகளில் நீர் ஆதாரங்களைப் பெருக்க வேண் டும். நீர் ஆதாரங்களை நல்ல முறையில் பாதுகாத்தால், இன்னும் பதினைந்து ஆண்டுகளில், தமிழகத்தில் ஏற்படக் கூடிய 30 சதவீதம் நீர்ப் பற்றாக்குறையை போக்கலாம்.
இவ்வாறு வீரபுத்திரன் தெரிவித் தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago