சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், திருவள்ளூர் அருகே புட்லூர் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள ரயில்வே கடவுப்பாதை அடிக்கடி மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைதவிர்க்க, கடந்த 5 ஆண்டுகளுக்குமுன்பு தொடங்கப்பட்ட ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நத்தை வேகத்தில் நடந்து வருகிறது என, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்
இதுகுறித்து, பொதுமக்கள் தெரிவித்ததாவது: புட்லூர் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள கடவுப் பாதை அடிக்கடி மூடப்படுவதால், ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கடந்த 2015-ம் ஆண்டு, புட்லூர்- காக்களூர் பகுதிகளை இணைக்கும் வகையில், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. இதில், ரயில்வே தண்டவாளப் பகுதியில் 2 தூண்களுடன் கூடிய மேம்பாலப் பணி 2 ஆண்டுகளில் முடிந்துவிட்டது.
ஆனால், நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட பகுதியில் ரூ.33.09 கோடி மதிப்பில், 460 மீட்டர் நீளம், எட்டரை மீட்டர் அகலம் மற்றும் 26 தூண்கள், இரு புறங்களில் அணுகுச் சாலைகளுடன் அமைக்கப்பட்டு வரும் இந்த மேம்பாலப் பணி மிக மெதுவாக நடைபெற்று வருகிறது. இதனால், பல்வேறு இன்னலுக்கு உள்ளாகி வருகிறோம் என்றனர்.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: புட்லூர் மேம்பாலம் அமைக்கும் பணியில், நெடுஞ்சாலைத் துறைபகுதிகளில், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட காரணங்களால், இந்த ஆண்டு தொடக்கத்தில்தான், ரயில்வே கடவுப்பாதையின் இருபுறங்களான காக்களூர், புட்லூர் பகுதியில் தூண்கள்அமைத்தல் உள்ளிட்ட பணிகள்தொடங்கின. கரோனா ஊரடங்கால் தாமதமாக நடைபெற்று வந்த பணிகள் தற்போது விரைவாகநடைபெறுகின்றன. இதனால்,மேம்பாலப் பணிகள் 2021 ஜூலைக்குள் முடிவுக்கு வரும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago