2021 தேர்தல் திமுகவின் கடைசி தேர்தல்: விழுப்புரம் வேல் யாத்திரை பொதுக் கூட்டத்தில் எச். ராஜா பேச்சு

By செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் நேற்று மாலை பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரை பொதுக்கூட்டம் அக்கட் சியின் மாவட்டத் தலைவர் கலிவ ரதன் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா, மாநில செயலாளர் சரவணன், நிர்வாகிகள் தியாகராஜன், ஜெயகுமார், தாஸசத்தி யன், சுகுமாறன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் எச். ராஜா பேசியது:

திராவிடக் கட்சிகளை வேறோடுஅழிக்கவே இந்த ஆன்மிக யாத் திரை நடைபெறுகிறது. திராவிடக் கட்சிகள்தான் அரசியலில் மதத்தைகலந்தன. திமுக எம்.பியாக இருந்தஆதி சங்கர் வைத்த குங்குமத்தைவிமர்சித்த கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையாரும், ஸ்டாலின் மனைவி துர்காவும்ஆன்மிகத்தை கடைபிடிக்கிறார் கள். அவர்கள் தான் பெண் சிங்கங்கள். தைரியசாலிகள்.

பாரத தேசத்தில்தான் பகுத்தறி வாளர்கள் உள்ளனர். உலகம் உருண்டை என்று சொன்னது நம் தேசம். இங்குள்ள பஞ்சாங்கத்திற்கு இணையான விஞ் ஞான ஆதாரம் எங்கேனும் உள் ளதா?

‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் கடவுள் உண்டு, சாமியார்கள் தேவையில்லை என்கிறது. ஆனால்கிறிஸ்தவ, இஸ்லாமிய மத போத கர்களை விமர்சித்து காட்சிகள் இல்லை. முன்னதாக வெளியிட்ட அப்படத்தின் டீஸரில் கிறிஸ்தவ மதத்தை விமர்சித்து வைக்கப்பட்ட காட்சி, அவர்கள் மிரட்டலால் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இந் துக்கள் மிரட்டாததால் இப்படம் வெளியாகியுள்ளது.

மக்களிடம் தெளிவு ஏற்படுத் தவே வெற்றிவேல் யாத்திரை நடத்தப்படுகிறது. மனு தர்மத்தை விமர்சித்த திருமாவளவனை அரசியலில் இருந்து அடித்து விரட்டும் வரை இந்த யாத்திரை தொடரும். கருப்பர் கூட்டத்தின் பின்னணியில் இருப்பது திமுக தான்.

2021 தேர்தல் திமுகவின் கடைசி தேர்தலாக இருக்கும். பாஜகவின் ஆதரவு இல்லாமல் 2021ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி அமையாது. இவ்வாறு அவர் பேசினார். இதனை தொடர்ந்து அனுமதியின்றி நடத்தப்பட்ட கூட்டத்தில் பங்கேற்றதாக எச் ராஜா உள்ளி ட்டோரை விழுப்புரம் போலீஸார் கைது செய்தனர்.

கடலூரில் இன்று வேல் யாத்திரைக்கு தடை

கடலூரில் இன்று பாஜக மாநில தலைவர் முருகன் தலைமையில் நடைபெற உள்ள வேல் யாத்திரைக்கு கடலூர் நகர பாஜக சார்பில் மாவட்ட எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டது. இதற்கு அனுமதி மறுத்து போலீஸார் தடை விதித்துள்ளனர். மீறி நடந்தால் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட எஸ்.பி. அபிநவ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்