பழநி துப்பாக்கிச் சூட்டில் குண்டடிபட்ட ஒருவர் உயிரிழப்பு: கொலை வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை

By பி.டி.ரவிச்சந்திரன்

பழநியில் இடப்பிரச்சனை காரணமாக தியேட்டர் உரிமையாளர் நடராஜன் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த இருவரில், சுப்பிரமணி இன்று அதிகாலை சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தார்.

இதையடுத்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி பழநி நகர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இடப்பிரச்சனை காரணமாக தியேட்டர் உரிமையாளர் நடராஜன் துப்பாக்கியால் சுட்டதில், பழனிச்சாமி, சுப்பிரமணி ஆகியோர் குண்டடிபட்டு படுகாயமடைந்தனர்.

பழநி நகர் போலீஸார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர். நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பழநி கிளைச்சிறையில் நடராஜன் அடைக்கப்பட்டார்.

பழனிச்சாமியின் உடலில் பாய்ந்த குண்டை பழநி அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினர். உயிருக்கு ஆபத்தில்லாத நிலையில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.

குண்டடிபட்ட சுப்பிரமணி ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். இங்கு அறுவை சிகிச்சையின் மூலம் நேற்று இரவு குண்டு அகற்றப்பட்டது. இருந்தபோதும் குண்டு தாக்கியதில் ரத்தநாளங்கள் சேதமடைந்ததால் ரத்தப்போக்கு அதிகமானதன் காரணமாக இன்று அதிகாலை சுப்பிரமணி உயிரிழந்தார்.

இதையடுத்து தியேட்டர் உரிமையாளர் நடராஜன் மீது பதிவு செய்யப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கை பழநி நகர் போலீஸார் கொலை வழக்காக மாற்றி தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்