திருவண்ணாமலையில் தீபத் திருவிழா இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் இன்று (17-ம் தேதி) இரவு கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது. மேலும், நாளை இரவு பிடாரி அம்மன்உ ற்சவமும், நாளை மறுநாள் விநாயகர் உற்சவமும் நடைபெறும்.

இதையடுத்து, அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடி மரத்தில் வரும் 20-ம் தேதி கொடியேற்றம் நடைபெறும். அதன்பிறகு, 10 நாள் உற்சவம் தொடங்குகிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக, மாட வீதியில் சுவாமி வீதி உலா, தேரோட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் பவனி வர உள்ளனர்.

முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் வரும் 29-ம் தேதி ஏற்றப்பட உள்ளன. அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. தீபத் திருநாளில் சுவாமி தரிசனத்துக்கும் அண்ணாமலை மீது ஏறிச் செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்