சென்னையின் 16 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்த வாக்காளர்கள் 39.40 லட்சம்

By செய்திப்பிரிவு

சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று வெளியிட்டார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று (16.11.2020) ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் 01.01.2021ஆம் தேதியினைத் தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 2021ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று 16.11.2020 வெளியிடப்படுகிறது.

மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா அல்லது இல்லையா என்பது குறித்து சரிபார்த்துக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எப்படி திருத்த முறை மேற்கொள்வது?

*வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 01.01.2021 அன்று 18 வயது நிறைவு அடைபவர்கள் (01.01.2003 ஆம் தேதிக்கு முன்பாகப் பிறந்தவர்கள்) படிவம் 6-ஐப் பூர்த்தி செய்து தரவேண்டும்.

*பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐப் பூர்த்தி செய்து தரவேண்டும்.

* பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8-ஐப் பூர்த்தி செய்து தர வேண்டும்.

* சட்டப்பேரவைத் தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8-A-ஐப் பூர்த்தி செய்து தரவேண்டும்.

அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் / பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் (நவ.16) இன்று முதல் டிசம்பர் 15 முடிய உள்ள காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் நவ.21, 22 மற்றும் டிச.12, 13 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) ஆகிய நாட்களில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

மேலும், பொதுமக்கள் இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம். (இணையதள முகவரி- www.elections.tn.gov.in ) விண்ணப்பங்களை வலைதளம் மூலமே மேற்கொள்ள வாக்காளர்கள் கோரப்படுகின்றனர்.

சென்னை மாவட்டத்தில் 3,754 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதிகபட்சமாக பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 297 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு 14.02.2020 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர்கள் பட்டியலின்படி,

* ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 19,43,556.

*பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 20,02,223.

*இதர வாக்காளர்களின் எண்ணிக்கை 1,013.

மொத்தம் சென்னை மாவட்டத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை 39,46,792.

நடைபெற்று முடிந்த தொடர் திருத்தத்தில் சென்னை மாவட்டத்தில் 19,39,694 ஆண் வாக்காளர்கள், 19,99,995 பெண் வாக்காளர்கள், 1015 இதர வாக்காளர்கள் என மொத்தம் 39,40,704 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மேலும் 10,986 ஆண் வாக்காளர்கள், 9,167 பெண் வாக்காளர்கள் மற்றும் 8 இதர வாக்காளர்கள் என மொத்தம் 20,161 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

தற்போது வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலின்படி சென்னை மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கீழ்க்கண்டவாறு உள்ளது.

சட்டப்பேரவை தொகுதியின் எண், பெயர், ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள், மொத்த வாக்காளர்கள்

1. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், ஆண் வாக்காளர்கள் - 1,22, 318, பெண் வாக்காளர்கள்- 1,31,301, இதர வாக்காளர்கள் 100. மொத்த வாக்காளர்கள் 2,53,719.

2. பெரம்பூர், ஆண் வாக்காளர்கள் - 1,48,674 , பெண் வாக்காளர்கள்- 1,52,990, இதர வாக்காளர்கள் 63. மொத்த வாக்காளர்கள் 3,01,727.

3. கொளத்தூர், ஆண் வாக்காளர்கள் -1,33,848, பெண் வாக்காளர்கள்- 1,39,200, இதர வாக்காளர்கள் 66. மொத்த வாக்காளர்கள் -2,73,114.

4. வில்லிவாக்கம், ஆண் வாக்காளர்கள் -1,23,690 , பெண் வாக்காளர்கள்- 1,28,310 , இதர வாக்காளர்கள் 62. மொத்த வாக்காளர்கள் - 2,52,062.

5. திரு.வி.க.நகர், ஆண் வாக்காளர்கள் -1,03,301, பெண் வாக்காளர்கள்- 1,09,524 ,இதர வாக்காளர்கள் 51. மொத்த வாக்காளர்கள் - 2,12,876.

6. எழும்பூர், ஆண் வாக்காளர்கள் -92,314 , பெண் வாக்காளர்கள்- 93,967 ,இதர வாக்காளர்கள் 53. மொத்த வாக்காளர்கள் - 1,86,334.

7. ராயபுரம் ஆண் வாக்காளர்கள் -90,265 , பெண் வாக்காளர்கள்-93,985, இதர வாக்காளர்கள் 49. மொத்த வாக்காளர்கள் - 1,84,299.

8. துறைமுகம், ஆண் வாக்காளர்கள் -90,335, பெண் வாக்காளர்கள்-83,094, இதர வாக்காளர்கள் -52. மொத்த வாக்காளர்கள் - 1,73,481.

9. சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி, ஆண் வாக்காளர்கள் -1,12,809, பெண் வாக்காளர்கள்-1,16,890, இதர வாக்காளர்கள் 32. மொத்த வாக்காளர்கள் -2,29,731.

10. ஆயிரம் விளக்கு, ஆண் வாக்காளர்கள் -1,16,055, பெண் வாக்காளர்கள்- 1,21,236, இதர வாக்காளர்கள் 86. மொத்த வாக்காளர்கள் - 2,37,377.

11. அண்ணாநகர், ஆண் வாக்காளர்கள் -1,36,698, பெண் வாக்காளர்கள்-1,41,249, இதர வாக்காளர்கள் 81. மொத்த வாக்காளர்கள் - 2,78,028.

12. விருகம்பாக்கம், ஆண் வாக்காளர்கள் -1,39,455 , பெண் வாக்காளர்கள்-1,39,804 , இதர வாக்காளர்கள் 85. மொத்த வாக்காளர்கள் - 2,79,344.

13. சைதாப்பேட்டை, ஆண் வாக்காளர்கள் -1,34,879 , பெண் வாக்காளர்கள்-1,39,628, இதர வாக்காளர்கள் 72. மொத்த வாக்காளர்கள் - 2,74,579.

14. தியாகராய நகர், ஆண் வாக்காளர்கள் -1,16,332, பெண் வாக்காளர்கள்- - 1,19,122, இதர வாக்காளர்கள் 43. மொத்த வாக்காளர்கள் 2,35,497

15. மயிலாப்பூர், ஆண் வாக்காளர்கள் -1,27,186, பெண் வாக்காளர்கள்-1,35,124 , இதர வாக்காளர்கள் 37. மொத்த வாக்காளர்கள் - 2,62,347.

16.வேளச்சேரி, ஆண் வாக்காளர்கள் -1,51,535 , பெண் வாக்காளர்கள்-1,54,571 , இதர வாக்காளர்கள் 83. மொத்த வாக்காளர்கள் - 3,06,189.

சென்னையின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை;

ஆண் வாக்காளர்கள் -19,39,694. பெண் வாக்காளர்கள்- 19,99,995. இதர வாக்காளர்கள் -1,015. மொத்த வாக்காளர்கள் - 39,40,704.

சென்னை மாவட்டத்தில் வாக்காளர் எண்ணிக்கை குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,73,481 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதியில் 3,06,189 வாக்காளர்களும் உள்ளனர்.

ஜனநாயகத்தினை வலுப்படுத்த, தகுதியுள்ள அனைத்துப் பொதுமக்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற ஏதுவாக வரைவு வாக்காளர் பட்டியலினைப் பார்வையிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) பி. ஃபெர்மி வித்யா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்