நவ.18-ல் கலந்தாய்வு; எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல்: அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்

By செய்திப்பிரிவு

2020-2021 ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார். நவ.18ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குவதாக அவர் அறிவித்தார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று 2020-2021 ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.

இதில் பொதுப்பிரிவு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு எனத் தனியாக இடம் ஒதுக்கப்படும். இந்த வருடம் முதல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 7.5% சதவீதம் அடிப்படையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் 405 மாணவர்கள் சேர தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

அரசு ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்கள் விவரம்:

1. ஸ்ரீஜன், 710, இந்தியன் பப்ளிக் பள்ளி, ஈரோடு.

2.மோகன பிரபாகர் ரவிச்சந்திரன், 705, பப்ளிக் பள்ளி, நாமக்கல்.

3.ஸ்வேதா, 701, சென்னை வேலம்மாள் வித்யாலயா, அயனம்பக்கம்.

4.யாழினி, 695, ஸ்ரீ சவுடம்பிகா மெட்ரிக் பள்ளி, விருதுநகர்.

5.அரவிந்த், 691, கிரீன் பார்க் இன்டர்நேஷனல் பள்ளி, தருமபுரி.

6. நேமிச்சரன், 690, வேலம்மாள் வித்யாலயா, திருவள்ளூர்,

7. விக்னேஷ், 688, வேலம்மாள் வித்யாலயா, திருவள்ளூர்,

8. அனுவர்ஷினி, 685, தூத்துக்குடி ஹோலிகிராஸ் பள்ளி.

9. ஆதித்தன், 683, சென்னை வேலம்மாள் வித்யாலயா, அயனம்பாக்கம்.

10. காவ்யா வர்ஷினி, 682, நெல்லை பாவை வித்யாஷ்ரமம் பள்ளி.

7.5% உள் ஒதுக்கீட்டில் தேர்வான மாணவர்களில் முதல் 3 மாணவர்கள்:

1. ஜீவித் குமார், 664, தேனி.

2.அன்பரசன், 646, கள்ளக்குறிச்சி.

3. திவ்யதர்ஷினி, 620, சென்னை.

இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:

''வரும் 18-ம் தேதி காலையில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும். நேரு உள் விளையாட்டரங்கில் தகுந்த பாதுகாப்பு இடைவெளியுடன் தினமும் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும்.

மாணவர்கள் எந்தத் தேதியில் வரவேண்டும் என்பதை அவர்களுடைய செல்போனுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். ஆன்லைன் மூலமாகவும் விவரங்களை அறிந்துகொள்ளலாம். அதை அறிந்து மாணவர்கள் சரியான நேரத்திற்கு வருகை தரவேண்டும் .ஒவ்வொரு மாணவருக்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் காத்திருக்கும் நேரத்தைக் குறைத்து சரியான முறையில் கவுன்சிலிங் நடத்தப்படும். தினந்தோறும் 500 பேருக்கு மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுடன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மட்டுமே வர அனுமதி தரப்பட உள்ளது .

மொத்தம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 24,712. ஏற்றுக்கொள்ளப்பட்டது 23,707. இதில் மாணவர்கள் 8,765, மாணவிகள் 14,942. மாநில அரசுக் கல்வித் திட்டத்தின் மூலம் படித்த மாணவர்கள் 15,885. சிபிஎஸ்இ பாடதிட்டம் மூலம் படித்த மாணவர்கள் 7,366. ஐசிஎஸ்இ பாடத்திட்டம் மூலம் படித்தவர்கள் 285, மற்ற பாடதிட்டம் மூலம் படித்தவர்கள் 171 பேர்.

விண்ணப்பித்தவர்களில் நடப்பாண்டு மாணவர்கள் 9,596 பேர். கடந்த ஆண்டு மாணவர்கள் 14,111 பேர்''.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்