அக்டோபரில் வழக்கத்தைவிட மழை குறைந்தாலும் சென்னை மண்டலத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: கைகொடுக்கும் மாநகராட்சியின் நீர்நிலை சீரமைப்பு திட்டங்கள்

By ச.கார்த்திகேயன்

சென்னையில் கடந்த அக்டோபரில் வழக்கத்தைவிட 12 சதவீதம் மழை குறைந்தாலும்மாநகரில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

சென்னை மாநகரம் 426 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இப்பகுதிகள் மணல், களிமண், பாறை சார்ந்த பகுதிகளாக உள்ளன. இந்த 3 விதமான பகுதிகளிலும் நிலத்தடிநீர் மட்டம் மற்றும் நீர் ஊடுருவும் தன்மை வேறுபடுகிறது.

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மாநகரம் முழுவதும் 145 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கிணறுகள் மூலம், மாதந்தோறும் நிலத்தடி நீர்மட்டம் ஆய்வு செய்யப்படுகிறது. அதன்படி கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத நிலத்தடி நீர்மட்ட ஒப்பீட்டு அறிக்கையை சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ளது.

மாநகரில் உள்ள 15 மண்டலங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும், அதிகபட்சமாக அண்ணாநகர் மண்டலத்தில் 0.92 மீட்டர், குறைந்தபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 0.20 மீட்டர் உயரம் வரை நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த அக்.1 முதல் 31 வரை 24 செமீ மழை பெய்துள்ளது. வழக்கமாக 27 செமீ மழை பெய்ய வேண்டும்.வழக்கத்தைவிட 3 செமீ அதாவது 12 சதவீதம் மழை குறைவாக பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்துள்ளார்.

மழை குறைவாக பெய்தபோதும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

தற்போது அனைத்து வீடுகளிலும் மழைநீர் கட்டமைப்பு செயல்படும் நிலையில் உள்ளதா என சென்னை குடிநீர் வாரியத்துடன் இணைந்து ஆய்வு செய்து வருகிறோம். செயல்படாத கட்டமைப்புகள் இருந்தால் அதை சரி செய்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம். கட்டமைப்புகள் இல்லாத வீடுகளில், கட்டமைப்பை ஏற்படுத்தவும் அறிவுறுத்தி வருகிறோம்.

மேலும் 8 கோயில் குளங்கள், 210 நீர்நிலைகள் மற்றும் 117 சமுதாய கிணறுகள் உள்ளிட்டவற்றை சீரமைத்து, அவற்றில் மழைநீர் சென்று சேர வழிவகை செய்துள்ளோம். இதன் காரணமாகவும் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்