தீபாவளி விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற் றுலாப் பயணிகள், அங்கு நிலவும் இதமான தட்பவெப்பநிலையை வெகுவாக ரசித்தனர்.
கரோனா பரவலால் விடுமுறைக் காலங்களில் கொடைக்கான லுக்குச் செல்லமுடியாத நிலை யில் சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். இந்நிலையில், தீபா வளி விடுமுறையில் சொந்த ஊர் களுக்கு வந்த பலரும் நேற்று கொடைக்கானல் சென்றனர். இத னால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
பிரையண்ட் பூங்கா, கோக் கர்ஸ் வாக், ரோஸ்கார்டன் ஆகியவற்றைக் கண்டு ரசித்தனர். படகு சவாரி, குதிரை சவாரிக்கு அனுமதியில்லாததால் பலர் ஏமாற் றமடைந்தனர். கொடைக்கானலில் சில தினங்களாக சாரல் மழை பெய்து வருவதால் நேற்று இதமான தட்பவெப்பநிலை நிலவியது. மேகக்கூட்டங்கள் இறங்கி வந்து சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக தழுவிச் சென்றது. பகலில் அதிகபட்சமாக 16 டிகிரி செல்சியசும், இரவில் குறைந்தபட்சமாக 13 டிகிரி செல்சியசும் நிலவியது. காற்றின் ஈரப்பதம் 92 சதவீதமாக இருந் ததாலும், ஆறு கிலோமீட்டர் வேகத்தில் மிதமான காற்று வீசியதால் மாலையில் குளிர் அதிகமாக இருந்தது. இதமான தட்பவெப்பநிலையைச் சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
48 secs ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago