தீபாவளியால் மதுரை மல்லிகை இன்று கிலோ ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2500 வரை விற்பனையானது. கொட்டும் மழையிலும் பொதுமக்கள் ஆர்வமாக பூக்களை வாங்கி சென்றாலும் தட்டுப்பாட்டால் போதுமான பூக்கள் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.
கரோனா ஊரடங்கால் மதுரை மல்லிகைக்கு கடந்த 8 மாதமாக விலையில்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த ஆயுதப்பூஜை நாளில் கிலோ ரூ.2 ஆயிரம் விற்பனையானது.
அதன்பிறகு கிலோ ரூ.150 முதில் ரூ.200 வரையே விற்றது. அதனால், பறி கூலி கூட கிடைக்காமல் விவசாயிகள் கவலையடைந்தனர். தீபாவளி பண்டிகையால் கடந்த கடந்த சில நாட்களாக மீண்டும் மதுரை மல்லிகை பூவுக்கு மவுசு ஏற்பட்டது. கடந்த 4 நாளாக தொடர்ந்து மதுரை மல்லிகை விலை அதிகரிக்கத்தொடங்கியது. நேற்று கிலோ ரூ.1,600க்கு விற்றது. இன்று உச்சமாக காலையில் ரூ.2000-க்கும், மாலையில் ரூ.2,500க்கு விற்றது.
தற்போது மழைகாலம் என்பதோடு குளிரும் அதிகமாக அடிப்பதால் மல்லிகைப்பூக்கள் உற்பத்தி 60 சதவீதம் குறைந்தது. அதனால், வழக்கமாக 14 முதல் 20 டன் வரை வரக்கூடிய மதுரை மல்லிகை தற்போது 4 டன் முதல் 6 டன் வரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு வந்து கொண்டிருக்கிறது.
இன்று மாலை மதுரையில் நல்ல மழை பெய்தது. அதனால், பொதுமக்கள் மழைக்கு பயந்து கடை வீதிகளுக்கு வராததால் தீபாவளிக்கு முந்தைய நாள் வியாபாரம் விவசாயிகளுக்கு பாதிக்கப்பட்டது.
ஆனால், மாட்டுத்தாவணி மலர் சந்தை வழக்கம்போல் கொட்டும் மழையிலும் வியாபாரம் ஜோராக நடந்தது. மதுரை மல்லிகைப்பூக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் வியாபாரிகள் நிர்ணயித்த விலைக்கு சிறு, குறு வியாபாரிகளும், பொதுமக்களும் பூக்களை வாங்கி சென்றனர்.
நாளை தீபாவளி நாளில் கிலோ ரூ.3 ஆயிரத்தை தாண்டக்கூடும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாட்டுத்தாவணி மலர் சந்தை வியாபாரி ராமச்சந்திரன் கூறுகையில், ‘‘மல்லிகைப்பூ மட்டுமில்லாது மற்றப்பூக்கள் விலையும் கூடியுள்ளது. கொட்டும்மழையும் பொருட்படுத்தாமல் பிச்சிப்பூ ரூ.1,200, முல்லைப்பூ ரூ.1,200, மெட்ராஸ் மல்லி ரூ.1,200, கனகாம்பரம் ரூ.2,000, செவ்வந்தி ரூ.400க்கு விற்றது, ’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago