கடல் சீற்றத்தினால் திசைமாறி எல்லை தாண்டிய தமிழக மீனவர்களுக்கு டீசலும், உணவும் அளித்து இலங்கைக் கடற்படையினர் திருப்பியனுப்பிய சம்பவம் நெகிழவைத்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தச் சார்ந்த தரங்ம்பாடி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்குச் சொந்தமான படகில், முத்துலிங்கம், ராஜ், ரஞ்சித் , முருகன் ஆகிய நான்கு மீனவர்கள் செவ்வாய்கிழமை நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறினால் பழுதாகி காற்றின் திசையில் இலங்கையில் உள்ள நெடுந்தீவு கடற்பகுதிக்குள் சென்றது.
அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்களைக் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
இலங்கைக் கடற்படையினர் நடத்திய விசாரணையில் மீனவர்கள் படகு பழுதாகி எல்லை பகுதிக்குள் நுழைந்ததை அறிந்து மீனவர்களுக்கு உணவு அளித்ததுடன் 50 லிட்டர் டீசலையும் வழங்கியுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் திருப்பி அனுப்பப்பட்ட 12 காரைக்கால் மீனவர்கள் .
இலங்கை கடற்படையினர் வழங்கிய டீசலைப் பயன்படுத்தி இயந்திரக் கோளாறையும் சரி செய்து நான்கு மீனவர்களும் வியாழக்கிழமை மதியம் கோடியக்கரை வந்தடைந்தனர்.
முன்னதாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சார்ந்த ஒரு விசைப்படகும் அதிலிருந்த 12 மீனவர்களையும் எல்லை தாண்டியக் குற்றஞ்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியின் போது கச்சத்தீவு அருகே செவ்வாய்கிழமை அதிகாலை கைது செய்தனர்.
இலங்கை கடற்படை நடத்திய விசாரணையில் கடல் சீற்றம் எல்லைப் பகுதிக்குள் நுழைந்து விட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இலங்கையில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மீனவர்களை சிறையில் அடைக்காமல் திருப்பி அனுப்பப்படலாம் என்று கடற்படையினர் முடிவெடுத்தால் 12 மீனவர்களும் திருப்பி அனுப்பட்டு மீனவர்கள் வியாழக்கிழமை காலை காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago