பனை மரங்களை வளர்க்கும் பணகுடி பள்ளி மாணவர்கள்

By அ.அருள்தாசன்

பணகுடி திருஇருதய மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பனங்கொட்டைகளை விதைக்கும் பணியில் கடந்த 3 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழரின் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்தது பனைமரம். அதன் அனைத்து பாகங்களும் பயன்படுவதே இதற்கு காரணம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தண்ணீர் இல்லாமலேயே வளரும் தன்மையுடைய பனைமரத்தை, காடு, தோட்டம் என வித்தியாசம் இல்லாமல் வயல் ஓரங்களிலும், வேலி ஓரங்களிலும் விவசாயிகள் வளர்த்தனர். இப்போது அவை அழியும் தருவாயில் உள்ளன. அடுத்த தலைமுறைக்கு பனைமரம் காட்சிப்பொருளாகிவிடுமோ என்ற நிலை உருவாகியுள்ளது.

இதனிடையே பனைமரங்களை வளர்க்கும் பணியில் பணகுடி திருஇருதய மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக இவர்கள் விதைத்த பனங்கொட்டைகளில் ஆயிரத்துக் கும் மேற்பட்டவை முளைவிட்டு வளர்ந்திருக் கின்றன. நடப்பாண்டு ஆயிரம் பனங்கொட்டைகளை குளக்கரைகள், ஓடைப்பகுதி, புறப்போக்கு நிலங்களில் இப்பள்ளி மாணவர்கள் விதைத் திருக்கிறார்கள்.

நாட்டு நலப்பணித்திட்ட அலுவ லர் ஆர்.ரெக்ஸ் கூறும்போது, `வரும் சந்ததிக்கு பனைமரங்களை அடையாளம் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதைச் செய்கிறோம். பனை வைத்தவன் பாக்கியவான் என்பார்கள். பனைமரத்தின் எப்பகுதியும் கழிவாக ஒதுக்கப்படுவதில்லை. கடந்த 3 ஆண்டுகளாக சிவகாமிபுரத்தில் 3 ஆயிரம் பனங்கொட்டை விதைகளை விதைத்திருக்கிறோம்.

இக்கிராமத்தை சேர்ந்த பூதப்பாண்டி வனச்சரகத் தில் பணி யாற்றும் வேட்டை தடுப்பு காவலர் பி.பாண்டித் துரை என்பவர்தான் சுற்றுவட்டார கிராமங்களில் பனங்கொட்டைகளை சேகரித்து எங்களுக்கு இலவசமாக அளிக் கிறார். நடப்பு காலாண்டு விடுமுறையில் நடத்தப்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் போது மாணவர்கள் வெவ்வேறு இடங்களில் அவற்றை விதைத் தனர். குளக்கரைகள், ஆற்றங்கரை களில் பனைமரங்களை வளர்த்தால் மண்அரிப்பு வெகுவாக தடுக்கப்படும். வரும் ஆண்டுகளிலும் பணகுடியை சுற்றியுள்ள பகுதிகளில் பனங் கொட்டைகளை விதைப் பதை முக்கிய பணியாக மேற்கொள்வோம் என்று உறுதி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்