கரோனாவால் காரைக்குடியில் தீபாவளி வியாபாரம் மந்தம்  சாலையோர வியாபாரிகள் பாதிப்பு

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கரோனாவால் தீபாவளி வியாபாரம் மந்தமாக நடப்பதால் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்துக்கள் முக்கிய பண்டிகையாக தீபாவளி உள்ளது. அன்றைய தினம் புத்தாடை அணிந்தும், இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் சிறப்பாக கொண்டாடுவர். இதனால் ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி கடைகளில் வியாபாரம் களைகட்டும்.

காரைக்குடியில் தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே வெளிமாநில, வெளி மாவட்ட வியாபாரிகள் சாலையோரங்களில் தற்காலிக கடைகள் அமைத்து வியபாரம் செய்வர்.

இந்தாண்டு நவ.14-ம் தேதி தீபாவளி என்பதால் காரைக்குடி செக்காலைரோடு, 100 அடி ரோடு, கல்லூரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கடைகளில் துணிகள் மட்டுமின்றி வீட்டு உபயோகப் பொருள்கள், அழகு சாதனப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கரோனாவால் பலரும் வேலையை இழந்து உணவுக்கே சிரமப்படுகின்றனர். மேலும் பலருக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த ஆண்டே போல் இந்தாண்டு கடைகளில் கூட்டம் இல்லை. பெரிய கடைகளில் கூட வியாபாரம் மந்தமாக நடக்கிறது. கடந்த காலங்களில் பெரிய கடைகளில் துணி எடுக்க வருவோர், சாலையோர கடைகளிலும் ஏதாவதொரு பொருளை வாங்கி செல்வர்.

ஆனால் இந்தாண்டு பெரும்பாலானோர் பொருட்கள் வாங்குவதை சுருக்கி கொண்டதால், சாலையோர கடைகளில் வியாபாரம் மந்தமாக உள்ளது.
இதனால் சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்