நவ.15 - மகாவீரர் நினைவு நாள்: இறைச்சிக் கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு

By செய்திப்பிரிவு

தீபாவளிக்கு மறுநாளான நவ.15 ஞாயிற்றுக்கிழமை மகாவீரர் நினைவு நாளை முன்னிட்டு, அனைத்து இறைச்சிக் கூடங்கள், சிறு இறைச்சிக் கடைகள் ஆகியவற்றை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் வருகின்ற நவ.15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மகாவீர் நிர்வான் நாளை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.

இதேபோல், ஆடு, மாடு, இதர இறைச்சிக் கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, அரசு உத்தரவின்படி கண்டிப்பாக நவ.15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழுவதும் அனைத்து இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் இறைச்சி விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

அரசு உத்தரவினைச் செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்