சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தீபாவளியையொட்டி ஆட்டுச் சந்தை களை கட்டியது. மொத்தம் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனையானது.
திருப்புவனத்தில் செவ்வாய்கிழமை தோறும் ஆட்டு சந்தை நடக்கிறது.
நவ.14-ம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால் இன்று மதுரை, திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.
ஆடுகளை வாங்குவதற்கு உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். மேலும் ஆடுகளின் விலையும் அதிகரித்திருந்தது.
» கிராமமக்கள் எதிர்ப்பால் காளையார்கோவிலில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நிறுத்தம்
» டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
ஒரு ஆடு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலைபோனது. 80 கிலோ எடையுள்ள ஒரு ஜோடி உயர் ரக வெள்ளாடு ரூ.40 ஆயிரம் வரை விற்பனையாது.
இதுகுறித்து ஆட்டு வியாபாரிகள் கூறுகையில், ‘ 3 நாட்களில் தீபாவளி வருவதால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் விலை அதிகரித்ததோடு, விற்பனையும் அதிகரித்தது. சந்தையில் ரூ.2கோடி முதல் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது,’ என்று கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago