விருதுநகர் வரும் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்க அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளை தமிழக முதல்வர் பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகின்றார்.
இந்நிலையில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்யவும் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் நாளை பிற்பகல் 3 மணிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி விருதுநகர் வருகிறார்.
விருதுநகர் வரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கும் வகையில் விருதுநகரில் கட்சி நிர்வாகிகளுடன் விருதுநகர் மாவட்ட கழக பொறுப்பாளரும் தமிழக பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி இன்று காலை ஆலோசனை நடத்தினார்.
» மதுரைக்கு அதிமுக ஆட்சி அள்ளிக்கொடுத்துள்ளது: ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் உதயகுமார் பதில்
» தமிழக வீரர் டி.நடராஜன் தேர்வு; இந்திய கிரிக்கெட் அணிக்குப் பெருமை சேர்க்க மு.க.ஸ்டாலின் வாழ்த்து
அப்போது அமைச்சர் பேசும்போது, விருதுநகருக்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு கழக நிர்வாகிகள் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு கொடுக்க வேண்டும். வழி நெடுகிலும் கழக கொடியுடன் வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
4 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago