ஸ்டாலின் தலைமையில் 'தமிழகம் மீட்போம்' சிறப்புப் பொதுக் கூட்டங்கள்: அடுத்தகட்டமாக நடைபெறும் மாவட்டங்கள் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக கலந்துகொள்ளும் 'தமிழகம் மீட்போம்!' எனும் தலைப்பிலான 2021-சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் மாவட்டங்கள் குறித்து திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று (நவ.10) வெளியிட்டுள்ள அறிவிப்பு:

"ஈரோடு, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, வேலூர், நீலகிரி, மதுரை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் காணொலிக் காட்சி மூலமாக 'தமிழகம் மீட்போம்!' எனும் தலைப்பிலான 2021-சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சிறப்புப் பொதுக்கூட்டங்களில் திமுக தலைவர் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக சிறப்புப் பொதுக் கூட்டங்கள் கீழே குறிப்பிட்டுள்ள தேதிகளில் வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட திமுக மாவட்டங்களை ஒருங்கிணைத்து நடைபெறும்.

நவம்பர் 18 - தருமபுரி

நவம்பர் 21 - சேலம்

நவம்பர் 25 - திருநெல்வேலி/தென்காசி

நவம்பர் 29 - திருப்பூர்

டிசம்பர் 2 - கிருஷ்ணகிரி".

இவ்வாறு திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்