ஜிப்மர் மருத்துவ சேர்க்கையில் புதுச்சேரிக்கான இடங்களை வெளி மாநிலத்தவர் அபகரிப்பு: வருவாய்த்துறை விசாரணை

By செய்திப்பிரிவு

ஆந்திரா மற்றும் தெலங்கானாவை சேர்ந்த 30 மாணவர்கள் மோசடி செய்து புதுச்சேரி ஒதுக்கீட்டில் உள்ள எம்பிபிஎஸ் இடங்களை அபகரித்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். புதுச்சேரி ஜிப்மரில் 187, காரைக் கால் கிளையில் 62 இடங்கள் என மொத்தம் 249 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 26 சதவீதம் புதுச்சேரி ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் புதுச்சேரி மாணவர்களுக்கு 64 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்கும். இந்நிலையில் இந்தாண்டு ஆந்திரா, தெலங்கானாவைச் சேர்ந்த 30 பேர் மோசடி செய்து ஜிப்மரில் எம்பிபிஎஸ் சீட் பெற்றிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவின்பேரில் 30 மாணவர்களின் பட்டியலை வைத்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘புதுச்சேரியில் மத்திய அரசு ஊழியர்கள் ஓராண்டு இருந்தாலே குடியுரிமை மற்றும் சாதி சான்றிதழ் வழங்குவதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மத்திய அரசு ஊழியர்கள் பலர் புதுச்சே ரிக்கு வருகின்றனர். 2 ஆண்டுகள் புதுச்சேரியில் தங்கி குழந்தைகளை படிக்க வைத்து வருவாய்த்துறை மூலம் சான்றிதழ்களை பெற்று விடுகின்றனர். சிலர் ஜிப்மரில் உள்ள எம்பிபிஎஸ் இடத்தை குறிவைத்தே குழந்தைகள் 6-வது முடித்தவுடனே சொந்த மாநிலத்திலிருந்து புதுச்சேரிக்கு வந்து விடுகின் றனர். பிளஸ் 2 முடிக்கும்போது 5 ஆண்டுகள் புதுச்சேரியில் வசிப்பதாக கூறி சான்றிதழ் பெறுகின்றனர்.

இவர்கள் அனைவரும் அதிகா ரம் மற்றும் பணப்பலத்தை பயன் படுத்தி சொந்த ஊரிலும் குடியுரிமை சான்றிதழ் பெறுகின்றனர். பின்னர் இரு மாநிலங்களிலும் உயர்க்கல் விக்கு விண்ணப்பித்து எங்கு இடம் கிடைக்கிறதோ அங்கு சேர்ந்து விடுகின்றனர். இது சட்டப்படி தவறு. இதுபோல் மோசடி செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் கடந்த காலங்களில் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

இது அவர்களை மேலும் தவறு செய்ய ஊக்குவிக்கிறது. தற்போது ஜிப்மரில் எம்பிபிஎஸ் இடங்களை பெற முறைகேடு செய்துள்ள 30 பேரின் பட்டியலை தயார் செய்து வைத்துள்ளோம். அவர்கள் எந்த அலுவலகம் மூலமாக விண்ணப்பித்து சான்றி தழ் பெற்றார்கள் உள்ளிட்ட விவ கரங்களை சேரித்து அடுத்து நடவடிக்கை எடுப்போம்’’ எனத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்