தமிழக மீனவர்களுடைய 94 விசைப்படகுகள் அழிக்கப்படுவதற்கான இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (நவ. 09) வெளியிட்ட அறிக்கை:
"தமிழக மீனவர்களுடைய 94 விசைப்படகுகள் அழிக்கப்படுவதற்கான இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவு, தமிழக மீனவர்களுக்கு மிகுந்த கவலையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து இலங்கை அரசோடு உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தி நம்முடைய மீனவர்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இலங்கை நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் நமது மீனவர்கள் மிகப்பெரிய நஷ்டத்தையும் அதனால் வாழ்வாதாரத்தையும் இழப்பார்கள். இந்த சோதனையான நேரத்தில் அவர்களோடு மத்திய, மாநில அரசுகள் துணைநின்று காப்பாற்ற வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago