ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் தோல் தொழிற்சாலை மேலாளரிடம் ரூ.45 லட்சம் பணம் மோசடி வழக்கில் திருவலம் சர்வமங்களா பீடாதிபதி சாந்தா சுவாமிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பொதிகை நகரைச் சேர்ந்தவர் கேசவமூர்த்தி (50). இவர், ராணிப்பேட்டையில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், திருவலம் பகுதியில் உள்ள சர்வமங்களா பீடத்துக்கு அடிக்கடி சென்று வருவார். அப்போது, பீடாதிபதி சாந்தகுமார் (45) என்ற சாந்தா சுவாமிகளுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது, கேசவமூர்த்தியிடம் சாந்தா சுவாமிகள், ‘‘நான் செய்துவரும் தொழிலில் முதலீடு செய்தால், பல கோடி லாபம் கிடைக்கும்’’ என கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, கேசவமூர்த்தி கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பல்வேறு நபர்களிடம் பணம் பெற்று பல கட்டங்களாக ரூ.45 லட்சம் வரை பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ரூ.50 லட்சம் காசோலை
அதன்பிறகு பணத்துக்கான லாபத்தை கொடுக்காமல் சாந்தா சுவாமிகள் அலைகழித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், முதலீடு செய்த பணத்தையாவது திருப்பிக்கொடுக்குமாறு கேசவமூர்த்தி பலமுறை கேட்டதாகவும், 4 ஆண்டுகளாக பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இருந்த சாந்தா சுவாமிகள், கடந்த ஆகஸ்டில் ரூ.50 லட்சத்துக்கான காசோலையை வழங்கியதாகவும் தெரிகிறது.
எனினும், அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்ததால் கேசவமூர்த்தி அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, தாம் ஏமாற்றப்பட்டது குறித்து, கேசவமூர்த்தி ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 15-ம் தேதி புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில், ராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பூரணி விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில், ரூ.45 லட்சம் பணம் மோசடி வழக்கில் சாந்தா சுவாமிகளை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை அரக்கோணம் கிளைச்சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, சாந்தா சுவாமிகள் மீது மேலும் 2 பேர் பணம் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளனர். அது தொடர்பாகவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago