தீபாவளி பிரியாணிக்கு தேனியில் உள்ள உணவகங்கள் இலவச முட்டை, மீன், சிக்கன் 65 உள்ளிட்ட பல்வேறு இலவசங்களையும், கூடு தல் சலுகைகளையும் அறிவித் துள்ளன.
வரும் 14-ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தேனியில் உள்ள பல ஓட்டல்களில் பிரி யாணிக்கு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மட்டன் பிரியாணி 3 பேருக்கு ரூ.635, 5 பேர் கொண்ட குடும்பத்தி னருக்கு ரூ.1484, 10 பேருக்கான பார்ட்டி பிரியாணி ரூ.2,703 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிக்கன் பிரியாணி 3 பேருக்கான ஜம்போ ரூ.459, பேமிலி பிரியாணி ரூ.1030, 10 பேருக்கான பார்ட்டி பிரியாணி ரூ.2 ஆயிரத்துக்கும் வழங்கப்படு கிறது. ஒவ்வொன்றுக்கும் தனித் தனியே முட்டை, குளிர்பானம், மீன் போன்லெஸ், சிக்கன் 65, சாப்பாடு, ரசம் உள்ளிட்டவை இலவசமாக அளிக்கப்படுகின்றன.
பல கடைகள் இதை விட விலை குறைவாகவும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. இதுதவிர அசைவ உணவுகளை தனித்தனி யாகவும் விற்பனை செய்ய பல உணவகங்கள் திட்டமிட்டுள்ளன. இதன்படி ஒரு கிலோ மண்பானை மட்டன் சுக்கா ரூ.1,200, சிக்கன் 65 ரூ.500, பெப்பர் சிக்கன் ரூ.800-க்கும் அளிக்க உள்ளன.
இது குறித்து அசைவ உணவக உரிமையாளர்கள் கூறுகையில், வாடிக்கையாளர்கள் பாத்திரம் கொண்டு வரத் தேவையில்லை. பிரியாணியின் அளவுக்கு ஏற்ப சிறு சிறு பக்கெட்டுகளில் தருகிறோம். கரோனாவினால் இந்த முறை இறைச்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இருப்பினும் போட்டி அதிகம் உள்ளதால் பல்வேறு சலுகைகளை அளித்துள்ளோம். முன்கூட்டியே பதிவு செய்பவர்களுக்குத்தான் இந்தச் சலுகை வழங்கப்படும் என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago