மதுரையில் மீண்டும் கிரானைட் குவாரிகள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குவாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மதுரை மாவட்ட குவாரிகள் உரிமையாளர் (அசோசியேஷன் ஆப் சதர்ன் ஸ்டோன் இன்டஸ்டிரீஸ்) சங்கத் தலைவர் பி.ஆர்.ராஜசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 2012 ஆகஸ்டில் மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளில் சில விதிமீறல் நடப்பதாகக் கூறி, 175 குவாரிகளில் 84 குவாரி உரிமையாளர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்தனர்.
இவ்வழக்கு முடியும் வரை எஞ்சிய 91 குவாரிகள் செயல்படக்கூடாது என, மாவட்ட நிர்வாகம் தடை ஏற்படுத்தியது. இருப்பினும், உரிமம் பெற்ற 91 குவாரிகளும் தொடர்ந்து 2 ஆண்டு ஏன் செயல்பட வில்லை என, விளக்கம் கேட்டு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.
நாங்கள் தயாராக உள்ளோம், மாவட்ட நிர்வாகம் தடையால் நடத்த முடியவில்லை என, விளக்கம் அளித்தும், ஏற்காமல் 91 குவாரிகளின் உரிமம் ரத்து செய்து செயல்பட அனுமதிக்கவில்லை.
எங்களுக்கு எதிரான வழக்கு களில் 8 ஆண்டுகளை கடந்தும் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. தொழில் செய்யமுடியாமல் துயரத்தில் உள்ளோம். வங்கிக்கடன், எங்களை நம்பிய தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு, இயந்திரங்கள் பராமரிப்பு போன்ற பல்வேறு சூழலில் பாதிக்கப்பட்டுள்ளோம்.
வழக்கில்லாத, புதிய குவாரிகளை ஆரம்பிக்கவும் முடியவில்லை. மதுரை மாவட்டத்தில் மட்டும் இத்தொழிலை நம்பி சுமார் 30 ஆயிரத்துக்கும் மேலான தொழிலாளர்களும், கிரானைட் தொழில் சார்ந்த பிற தொழில் களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இம்மாவட்டத்தில் உரிமம் பெற்ற இடங்களில் கிரானைட் எடுப் பதற்கு தேவையான தளவாட பொருட்கள், இயந்திரங்களை நிறுத்த பட்டா இடங்களை பயன்படுத்தியது தவறு என, வழக்கு கள் போட்டுள்ளனர். உரிமம் பெறும்போது, பொதுப்பணித்துறை கண்மாய், குளங்கள் இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தாண்டிய அரசு அனுமதி வழங்கும்போது, கண்மாய், கால்வாய், குளங்களை சேதப்படுத்த வாய்ப்பே இல்லை. இது தொடர்பாக ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை.
கற்பனை இழப்பீடு:
1997 முதல் 2013 வரை 17 ஆண்டில் மதுரை மாவட்டத்தில் ரூ. 2.798 கோடிக்கு கிரானைட் ஏற்றுமதியான நிலையில், முதலில் ரூ. 16 ஆயிரம் கோடி என்றும், இதன்பின் 13 ஆயிரம், 9 ஆயிரம் கோடி இழப்பீடு என, தெரிவிக்கப்பட்டது. இது முறையான புள்ளி விவரம் அல்ல. தொழில்நுட்ப அடிப்படையில் கணக்கீடு செய்யாமல் கற்பனையாக செய்யப்பட்டுள்ளது.
17 ஆண்டில் இந்திய மொத்த கிரானைட் ஏற்றுமதி 52.374 கோடி. தமிழகத்தின் பங்கு 13 சதவீதம். உற்பத்தியில் மதுரையின் பங்கு 41.10 சதவீதம். இதன்மூலம் மதுரையில் இருந்து ரூ. 2.798 கோடிக்கு ஏற்றுமதி நடந்துள்ளது.
எந்த முறைகேடும் நடக்கவில்லை. மதுரை மாவட் டம் மூலம் 2011-12ல் மட்டும் கனிம உரிமத்தொகையாக ரூ. 26 கோடி அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் 8 ஆண்டில் உரிமத்தொகை மட்டுமே ரூ.212 கோடி அரசுக்கு இழப் பீடு. அந்நிய செலவாணி மூலம் சுமார் 3 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில் நிபுணர்குழு மூலம் மதுரை கிரானைட் குவாரிகளை ஆய்விட்டு நடுநிலை முடிவெடுக்க, 2015ல் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதுவரை குழு ஆய்வு நடத்த வில்லை. நீதிமன்ற வழிகாட்டுதல்படி சிறப்புக்குழு குவாரி உரிமையாளர்கள் முன்னிலையில் ஆய்வு செய்யவேண்டும்.
விதிமீறல் இருந்தால் நடவடிக்கை, அபராதம் விதிக்கலாம் ஏற்கிறோம். ஆதாரமற்ற புள்ளி விவரங்களை காட்டி, இத் தொழில் முடக்கப்பட்டுள்ளது. புதிய குவாரிகள் துவங்க அனுமதி மறுக்கப்படுகிறது.
விரைவில் தீர்வு கிடைக்குமென நீதிமன்றத்தை இன்னும் நம்புகிறோம். மதுரை தவிர, பிற மாவட்டங்களில் குவாரிகள் செயல்படும் நிலையில் மதுரையிலும் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசும் நடவடிக்கை எடுக்கும் என, நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
துணைத்தலைவர் பிகே. செல்வராஜ், ஆறுமுகம், பொருளாளர் தெய்வேந்திரன், ஆலோசகர் பிகேஎம். செல்வம் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago