தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார்திருநகரி தெற்கு கோட்டூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராமையா தாஸ் (52). விவசாயியான இவர் பாஜக மாவட்ட அமைப்புசாரா பிரிவு செயலாளராகவும் இருந்து வந்தார்.
இவர் நேற்று காலை ஆழ்வார் திருநகரியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த போது அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் சாலை மறியல், மோட்டார் சைக்கிள், வைக்கோல் படப்புக்கு தீவைப்பு, வீடு மீது கல்வீச்சு போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்து அவர் உத்தரவிட்டார்.
இந்தத் தனிப்படை போலீஸார் ராமையா தாஸ் கொலை தொடர்பாக 6 பேரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக எஸ்பி எஸ்.ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமையா தாஸ் தனது வயலில் உளுந்து பயிரிட்டுள்ளார். அந்த வயலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்திருப்பேரை, யாதவர் தெருவை சேர்ந்த முத்து மகன் மாரி (49) என்பவரது ஆடு மற்றும் மாடுகள் மேய்ந்து பயிரை சேதப்படுத்தியுள்ளன.
இதுகுறித்து ராமையா தாஸ், மாரியிடம் சத்தம் போட்டு, பயிர் சேதமடைந்ததற்கு நஷ்டஈடு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாகவே ராமையா தாஸை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
தனிப்படை போலீஸார் துரித நடவடிக்கை எடுத்து கொலை நடந்த 14 மணி நேரத்தில் 6 பேரை கைது செய்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக ஆழ்வார்திரிநகரி யாதவர் தெருவை சேர்ந்த சேர்ந்த முத்து மகன் மாரி (49), அவரது மகன்கள் இசக்கி (19), செல்வம் (21), மனைவி சரஸ்வதி (50), உறவினர்களான அதே பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் கசமுத்து (66), செல்லத்துரை மகன் சுந்தர் (42) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலையில் தொடர்புடைய மேலும் ஒருவரை தனிப்படையினர் தேடி வருகின்றனர் என்றார் எஸ்பி.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago