மதுரையில் பிரபல சொகுசு ஓட்டலில் வருமானவரித் துறை அதிகாரிகள் 11 மணி நேரம் சோதனை 

By என்.சன்னாசி

மதுரையிலுள்ள பிரபல சொகுசு ஒட்டலில் வருமான வரித் துறையினர் சுமார் 11 மணிநேரம் சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் வரி ஏய்ப்பு போன்ற பல்வேறு புகார்களின் அடிப் படையில் முக்கிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனியார் கம்பெனி, நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது வழக்கம்.

இதன்படி, ஓரிரு புகாரின் அடிப்படையில் மதுரை கோச்சடை பகுதியில் செயல்படும் ஹெரிடேஜ் என்ற பிரபல சொகுசு ஓட்டலில் வருமானவரித்துறை அதிகாரிகள் குழு சோதனை மேற்கொள்ள திட்டமிட்டனர்.

இந்நிலையில் சென்னை, மதுரையைச் சேர்ந்த வருமானவரித் துறை அதிகாரிகள் அடங்கிய 20 பேர் கொண்ட குழு இன்று காலை சுமார் 7 மணிக்கு ஹெரிடேஜ் ஓட்டலுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

அவர்கள் அங்கு பணியில் இருந்த மேலாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். ஓட்டல் அலுவலகம் உள்ளிட்ட அறைகளில் இருந்த ஆவணங்களைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

காலை 7 முதல் மாலை வரை நடந்த இந்த சோதனையின்போது, விசாரணைக்கென அங்கிருந்து சில ஆவணங்களை கைப்பற்றிச் சென்றதாக வரு மானவரித்துறையினர் தரப்பு தெரிவிக்கிறது.

மேலும், இந்த ஓட்டலுக்கு சொந்த மான பிற இடங்களிலும் அதிகாரிகள் குழு சோதனை நடத்திய தாகவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்