நவம்பர் 9-ம் தேதி பிறந்தநாள் காணும் தனக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லத் திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் யாரும் நேரில் வர வேண்டாம் என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"வருகின்ற நவம்பர் 9-ம் தேதி எனது பிறந்தநாள் வருவதை ஒட்டி அன்றைய தினம் என்னை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவிப்பதற்காகத் திமுக நிர்வாகிகள், தோழர்கள், மாற்றுக் கட்சி நண்பர்கள், உறவினர்கள், பொதுமக்கள் உள்பட யாரும் நேரில் வர வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
கரோனா என்ற கொடிய நோய், கூட்டம் கூடும் இடங்களில் வேகமாகப் பரவிக் கொண்டிருப்பதால் நேரில் வந்து யாரும் நோய்த் தொற்று பாதிப்புக்கு ஆளாகி சிரமப்பட்டு விடக்கூடாது என்பதோடு உங்களது அன்பு என்றைக்கும் எனக்கு வேண்டும் என்பதால் வாழ்த்த நேரில் வருவதைத் தவிர்க்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்"
» ராமேசுவரம் கடலில் தோன்றிய சுழல்காற்று: கடல் நீரை உறிஞ்சியது
» புதுச்சேரியில் புதிதாக 108 பேருக்குக் கரோனா தொற்று; மேலும் ஒருவர் உயிரிழப்பு
இவ்வாறு கே.என்.நேரு தனது அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago