விபத்துகளைக் குறைக்க அரசு பஸ் ஓட்டுநர்களுக்கு குறும்படம் மூலம் விழிப்புணர்வு அளிக்கும் முயற்சியை போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது. இந்த குறும்படம் முதல்கட்டமாக திருச்சி கோட்டத்தில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் ஓட்டுநர் களுக்கு திரையிடப்பட்டு வருகிறது.
விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக உள் ளது. இதைக் கட்டுப்படுத்து வதற்காக பல்வேறு நடவடிக்கை களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, விபத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து 32 நிமிடங்கள் ஓடக்கூடிய ‘விபத்தில்லா நல்வாழ்வு’ என்ற குறும்படத்தை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகமே தயாரித் துள்ளது.
அனைத்து பணிமனைகளிலும் இக்குறும்படத்தை ஒளிபரப்பு செய்து, ஓட்டுநர்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் போக்குவரத்து கழகம் ஈடுபட்டுள் ளது.
விபத்துகள் ஏற்பட கவனக் குறைவு, அலட்சியம், அதிவேகம், ஓய்வின்மை, நிலையற்ற மனநிலை ஆகியவையே முக்கிய காரணங் களாக இந்த குறும்படத்தில் குறிப் பிடப்பட்டுள்ளன. ஒரு விபத்தால், அதில் இறப்போர், காயமடை வோரின் குடும்பங்கள், பின்னா ளில் எந்த அளவுக்கு பாதிக்கப் படுகின்றன என்பது குறித்து, புள்ளி விவரங்களுடன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர விபத்து ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு தண்டனையாக தற்காலிக பணிநீக்கம், ஊதிய உயர்வு நிறுத்தம் போன்றவை செய்யப்படுவதால், அவர்களுக்கு ஏற்படும் தேவையற்ற நெருக்கடி குறித்தும் இந்த குறும்படத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருந்துகளை இயக்கு வதன் மூலம் அரசுக்கு கிடைக்கக் கூடிய வருவாயின் பெரும்பகுதி, விபத்து இழப்பீட்டு தொகையாக பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்படு வதால் போக்குவரத்துக் கழகத் துக்கு ஏற்படும் நிதி நெருக்கடி குறித்தும் இந்த குறும்படம் விளக்கு கிறது.
அண்மையில் தமிழகத்தில் நிகழ்ந்த சில விபத்துகளின் நேரடிக் காட்சிகள் இக்குறும்படத்தில் இடம் பெற்றுள்ளன. அதில், தவறு செய்தது யார், விபத்தை தவிர்க்க என்ன செய்திருக்க வேண்டும் என சுட்டிக்காட்டி ஓட்டுநர்களுக்கு ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக திருச்சி மண்ட லத்திலுள்ள 13 கிளைகளில் தற் போது இந்த குறும்படம் திரையிடப் பட்டு வருகிறது.
இதுபற்றி கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டல மேலா ளர் பாண்டி கூறும்போது, “அரசுப் பேருந்துகளை விபத்தின்றி இயக் குவதற்காக தொழில்நுட்ப ரீதியாக வும், உளவியல் ரீதியாகவும் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ஓட்டுநரின் ஒரு நொடி கவனக்குறைவு, பலரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது. எனவே, எந்த மாதிரியான காலகட்டத்திலும் தன்னால் விபத்தின்றி பேருந்தை இயக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி, ஓட்டுநர்களிடம் மனமாற் றத்தைக் கொண்டு வருவதற்காக இந்த விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும் ஓட்டுநர்கள் அதற்குப் பிறகு நிச்சயம் மிக கவனமாக பேருந்தை இயக்குவார்கள் என நம்புகிறோம். அதேபோல, ஓட்டு நர்கள் தெரிவிக்கும் குறைகள், புகார்களின் அடிப்படையில் பேருந்துகளில் உள்ள பழுதுகளை யும் உடனுக்குடன் சரிசெய்ய நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
26 சதவீத ஓட்டுநர்கள்
அரசுப் பேருந்துகளை இயக்கும் போது ஏற்படும் விபத்துகள் குறித்து போக்குவரத்து கழகத்தினர் ஆய்வு நடத்தியுள்ளனர். அதில், 35 முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஓட்டுநர்கள் 26 சதவீதமும், 31-35 வயதுடையவர்கள் 23 சதவீதமும் விபத்துகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், 51-60 வயதுக்கு உட்பட்ட ஓட்டுநர் களின் வாகனங்கள் 6 சதவீத விபத் துகளை மட்டுமே சந்தித்துள்ளன. இப்பட்டியலில் இவர்கள் கடைசி இடத்தைப் பிடித்துள்ளனர்.
மாலை 6 முதல் 9 மணி வரை யிலான காலகட்டம், 37 சதவீத விபத்துகள் நடைபெற்று முதலி டத்தில் உள்ளது. இரவு 9 முதல் 12 மணி வரை 13.2 சதவீத விபத்துகளும், காலை 6 மணி முதல் 9 மணி வரை 13 சதவீத விபத்துகளும் நடைபெறுவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் மதியம் உணவு உண்ட பிறகு இயக்கப்படும் வாகனங்களாலும் விபத்து ஏற்படுத்துவது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago