2019 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகள்: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

By செய்திப்பிரிவு

2019 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட 37 விருதாளர்களில், 19 விருதாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்ச் செம்மல் விருதுகளை வழங்கி, பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்தார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (நவ. 3) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"ஜெயலலிதா கடந்த 25.7.2014 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ் வளர்ச்சிக்காகத் தனி ஆளாகத் தொண்டு செய்தும், தமிழ் அமைப்பு வைத்துத் தமிழ் மொழிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களை மாவட்டந்தோறும் கண்டறிந்து, அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்ச் செம்மல் விருது ஆண்டுதோறும், ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் என்றவாறு வழங்கப்படும் என்றும், இவ்விருது பெறுபவருக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கான விருதுத் தொகையும், தகுதியுரையும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

அதன்படி, தமிழ்நாடு அரசு 2015-ம் ஆண்டு முதல் தமிழ்ச் செம்மல் விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது.

தமிழ்ச் செம்மல் விருதாளர்களுடன் முதல்வர் பழனிசாமி.

அவ்வகையில், 2019 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள்

முனைவர் கோ.ப.செல்லம்மாள் (சென்னை மாவட்டம்), முனைவர் மரியதெரசா (திருவள்ளூர் மாவட்டம்), முனைவர் எஸ்.ஸ்ரீகுமார் (காஞ்சிபுரம் மாவட்டம்), ச.இலக்குமிபதி (வேலூர் மாவட்டம்), கவிஞர் அ.க.இராசு (எ) பாளைவேந்தன் (கிருஷ்ணகிரி மாவட்டம்), கவிஞர் எறும்பூர் கை.செல்வகுமார் (திருவண்ணாமலை மாவட்டம்), கல்லைக்கவிஞர் வீ. கோவிந்தராசன் (விழுப்புரம் மாவட்டம்), முனைவர் எஸ்.எம். கார்த்திகேயன் (கடலூர் மாவட்டம்), முனைவர் த.மாயகிருட்டிணன் (பெரம்பலூர் மாவட்டம்), முனைவர் து. சேகர் (அரியலூர் மாவட்டம்), வ.முத்துமாரய்யன் (சேலம் மாவட்டம்).

கவிஞர் மா.இராமமூர்த்தி (தருமபுரி மாவட்டம்), ப. சுப்பண்ணன் (நாமக்கல் மாவட்டம்), முனைவர் எண்ணம்மங்கலம் அ.பழநிசாமி (ஈரோடு மாவட்டம்), முனைவர் சு.இளவரசி (கரூர் மாவட்டம்), கவிஞர் அ.ஞானமணி (கோயம்புத்தூர் மாவட்டம்), முத்து சுப்ரமணியன் (திருப்பூர் மாவட்டம்), சபீதா போஜன் (நீலகிரி மாவட்டம்), அ.அந்தோணி துரைராஜ் (திருச்சி மாவட்டம்), முனைவர் அ.அ.ஞானசுந்தரத்தரசு (புதுக்கோட்டை மாவட்டம்), சொ.பகீரதநாச்சியப்பன் (சிவகங்கை மாவட்டம்), ஆதி நெடுஞ்செழியன் (தஞ்சாவூர் மாவட்டம்), இரா.கல்யாணராமன் (திருவாரூர் மாவட்டம்).

சி. சிவசங்கரன் (நாகப்பட்டினம் மாவட்டம்), மை.அப்துல்சலாம் (ராமநாதபுரம் மாவட்டம்), முனைவர் பி. சங்கரலிங்கம் (மதுரை மாவட்டம்), முனைவர் அ.சு.இளங்கோவன் (திண்டுக்கல் மாவட்டம்), சா.பி.நாகராசன் (எ) தேனி இராஜதாசன் (தேனி மாவட்டம்), முனைவர் இரா.இளவரசு (விருதுநகர் மாவட்டம்), க.அழகிரிபாண்டியன் (திருநெல்வேலி மாவட்டம்), நம். சீநிவாசன் (தூத்துக்குடி மாவட்டம்), குமரிஆதவன் (கன்னியாகுமரி மாவட்டம்), ந.கருணாநிதி (திருப்பத்தூர் மாவட்டம்), வத்சலா சேதுராமன் (செங்கல்பட்டு மாவட்டம்), த.தினகரன் (ராணிப்பேட்டை மாவட்டம்), உமாகல்யாணி (தென்காசி மாவட்டம்) மற்றும் பெ.அறிவழகன் (கள்ளக்குறிச்சி மாவட்டம்).

இந்த 37 விருதாளர்களில், 19 விருதாளர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி இன்று தமிழ்ச் செம்மல் விருதுக்கான விருதுத் தொகை 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்தார்.

தமிழ்ச் செம்மல் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட இதர விருதாளர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் அமைச்சர்களால் தமிழ்ச் செம்மல் விருதுகள் வழங்கப்படும்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்