நண்பரும், பிரபல மும்பை பாடகருமான பவ்னிந்தர் சிங் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிட்டுத் திருமணம் ஆனது போன்று தோற்றத்தை உருவாக்கியுள்ளதால், அவர் மீது அவதூறு வழக்குத் தொடர அமலாபால் அனுமதி கோரினார். சென்னை உயர் நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்துள்ளது.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இயக்குநர் விஜய்யைத் திருமணம் செய்தார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார். பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங், நடிகை அமலாபாலுடன் எடுத்த புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். பின்னர் அவற்றை நீக்கிவிட்டார். தன்னை இணைத்து தவறான ஒரு தகவலை வலைதளங்களில் பரப்பிய முன்னாள் நண்பர் பவ்னிந்தர் சிங்குக்கு எதிராக, அவதூறு வழக்குத் தொடர அனுமதி கோரி நடிகை அமலாபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், தனக்கும், பவ்னிந்தர் சிங்குக்கும் திருமணம் ஆனதாகக் கூறி, அவருடன் எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இது தனக்கு மன உளைச்சலையும் பொதுவெளியில் தன்னைக் குறித்து தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. எனவே பவ்னிந்தர் சிங் மீது சிவில் அவதூறு வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், பாடகர் பவ்னிந்தர் சிங் மீது சிவில் அவதூறு வழக்குத் தொடர நடிகை அமலாபாலுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago