கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற கைதியை போலீஸார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
தூத்துக்குடி கூட்டாம்புளியை சேர்ந்த மூக்காண்டி மகன் சக்திவேல். செல்போன் திருட்டு வழக்கு தொடர்பாக ஏரல் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்ட இவர், கடந்த 14-ம் தேதி கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு கிளைச் சிறையில் இருந்த கைதிகள் வெளியே வந்தனர். மீண்டும் அவர்களை 8 மணிக்கு சிறைக்காவலர்கள் அறைகளுக்குள் அடைத்தனர்.
அப்போது சக்திவேலை மட்டும் காணவில்லை. சிறைக்காவலர்கள் தேடியபோது அவர், கிழக்கின் பின்புறம் உள்ள சுவர் வழியாக ஏறி செல்வதைப் பார்த்தனர்.
» வேளாண் சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் ராகுல் தலைமையில் ஏர் கலப்பை ஊர்வலம்: கே.எஸ்.அழகிரி தகவல்
உடனடியாக அவரை பிடிக்க சுற்றுச் சுவர் மீது காவலர்கள் ஏறினர். இதனைப் பார்த்த சக்திவேல் அங்கிருந்த மரம் வழியாக தப்ப முயன்றார். அப்போது சிறைக்காவலர்கள் அவரை சுற்றிவளைத்தனர்.
இதனால் மீண்டும் கிளைச் சிறை வளாகத்துக்குள்ளேயே குதித்தார். இதனால் அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. சிறைக் காவலர்கள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago