தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளவேட்பாளர்களைக் கண்டறிவது, தேர்தல் அறிக்கை தயாரிப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கூட்டணி அமைப்பது, வேட்பாளர் தேர்வு போன்றவற்றை முடிவு செய்யும் அதிகாரம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, மாவட்ட செயலாளர்கள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருடன் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று முதல் 3 நாட்களுக்கு கமல்ஹாசன் ஆலோசனை நடத்த உள்ளார். 7 அமர்வுகளாகப் பிரித்து மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணி, தொழிலாளர் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். எந்தந்த தொகுதிகளில் கட்சி பலமாக உள்ளது, கட்சியை பலப்படுத்த எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், வேட்பாளராக யாரைநிறுத்தினால் வெற்றி வாய்ப்பு உள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. மேலும், கட்சியின் நிர்வாகிகள் ஒவ்வொருவரையும் பேச வைத்து அவர்களுடைய கருத்துகளையும் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேட்டறிய உள்ளார் என்று மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago