திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பாசனத்துக்காக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து ஆண்டுதோறும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் மூலம் 2,260 ஏக்கர், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய் மூலம் 870 ஏக்கர், நதியுண்ணி கால்வாய் மூலம் 2,460 ஏக்கர், கன்னடியன் கால்வாய் மூலம் 12,500 ஏக்கர், கோடகன் கால்வாய் மூலம் 6,000 ஏக்கர், பாளையங்கால்வாய் மூலம் 9,500 ஏக்கர், திருநெல்வேலி கால்வாய் மூலம் 6,410 ஏக்கர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால்வாய் மூலம் 12,762 ஏக்கர், மருதூர் கீழக்கால் கால்வாய் மூலம் 7,785 ஏக்கர், தெற்கு பிரதான கால்வாய் மூலம் 12,760 ஏக்கர், வடக்கு பிரதான கால்வாய் மூலம் 12,800 ஏக்கர் என, மொத்தம் 86,107 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
முதல்வர் உத்தரவு
இவ்வாண்டு இரு மாவட்டங்களிலும் பிசான சாகுபடிக்காக பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, திருநெல்வேலி ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அணையிலிருந்து தண்ணீரை நேற்று திறந்து வைத்தார். அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.முருகையாபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வரும் 31.3.2021 வரை 151 நாட்களுக்கு தண்ணீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப் படும். திருநெல்வேலி மாவட்டத் தில் அம்பாசமுத்திரம், சேரன் மகாதேவி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகியவற்றை உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் வைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் ஏரல் ஆகியவற்றை உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்கள் பயன்பெறும். தற்போது 1,400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மணிமுத்தாறு
இதுபோல் மணிமுத்தாறு அணையிலிருந்தும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த அணையிலிருந்து மணிமுத்தாறு பெருங்கால் பாசனத்தின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகளுக்கு பிசான பருவ சாகுபடிக்காக வரும் 31.3.2021 வரை 151 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
இதனால் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவி குளம், தெற்கு பாப்பான்குளம், தெற்கு கல்லிடைகுறிச்சி பகுதி களில் 2,756 ஏக்கர் பாசன வசதி பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago