7 மாதங்களுக்குப் பிறகு கடலூரில் இருந்து புதுச்சேரி மாநிலத்துக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன.
கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை அமலில் உள்ளது. இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுப் போக்குவரத்து தடை நீக்கப்பட்டு பேருந்துகள், கனரக வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கலாம் என்று தமிழக அரசு உத்தவிட்டது. மேலும், அனைத்து மாவட்டங்களுக்கும் எந்தவிதமாக கட்டுப்பாடும் இல்லாமல் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டது.
ஆனால், தமிழக பகுதியான கடலூரில் இருந்து புதுச்சேரி மாநிலத்துக்கு நேற்று (அக். 31) வரை பேருந்துகளை இயக்க அரசு அனுமதிக்கவில்லை. மேலும், புதுச்சேரி மாநிலம் வழியாக சென்னை சென்ற அரசு பேருந்துகள் புதுச்சேரியில் நிற்காமல் சென்று வந்தன. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து இல்லாமல் இருந்தது.
கடலூரில் இருந்து புதுச்சேரி மாநிலத்துக்கு மருத்துவமனைகள் மற்றும் வேலை உள்ளிட்ட பணிகளுக்காக சென்று வருபவர்கள் இருசக்கர வாகனம், கார், ஆட்டோக்களில் சென்று வந்தனர்.
இந்த நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில் போக்குவரத்துத் தடையை நீக்கி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக பகுதிகளில் இருந்து புதுச்சேரி மாநிலத்துக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, இன்று (நவ. 1) கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் புதுச்சேரி மாநிலத்துக்கு இயக்கப்பட்டது. பேருந்துகளில் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. அனவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இன்று குறைந்த அளவு பயணிகளே பயணம் செய்தனர். கடந்த 7 மாதத்துக்குப் பிறகு நேற்று தான் புதுச்சேரி மாநிலத்துக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
37 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago