புதுவைக்கு பேருந்துகள் இயக்க அனுமதி: இ-பதிவு முறையை ரத்து செய்தது தமிழக அரசு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் கோரிக்கையை ஏற்று, தமிழகம் - புதுச்சேரி இடையே இ-பதிவு இல்லாமல் அரசு, தனியார் பேருந்து போக்குவரத்தை உடனடியாக தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல்படுத் தப்பட்டது. இதைத் தொடர்ந்து புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருந்ததாவது:

புதுச்சேரியில் ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகள், 6 இதர தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. காரைக்காலில் உள்ள ஜிப்மர் நிறுவனம் புதுச்சேரி மட்டுமின்றி அருகே உள்ள தமிழக மாவட்ட மக்களுக்கும் சேவையாற்றி வருகிறது. எனவே, மருத்துவக் காரணங்களுக்காக வருவோருக்கு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.

பெரும்பாலான தமிழக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை புதுச்சேரி, காரைக்காலில் விற்பனை செய்கின்றனர். சிறு மற்றும் சாலையோர வியாபாரிகள் தினமும் தமிழகம்- புதுவை இடையே பயணிக்கின்றனர். இங்குள்ள தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் பணியாற்றும் பலர் தமிழகத்தில் இருந்து வருகின்றனர். தமிழக மக்கள் அதிக அளவில் புதுச்சேரிக்கு வந்து பல்வேறு பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். எனவே, பேருந்துகளை இயக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவரது கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு அரசு, தனியார் பேருந்து போக்குவரத்தை அனுமதிக்க உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழக அரசுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் பரிந்துரைத்தார்.

இந்த பரிந்துரையை ஏற்று வருவாய் துறை சார்பில் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட அரசாணையில், ‘‘புதுச்சேரி முதல் வரின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, இ-பதிவு எதுவும் இன்றி தமிழகம் - புதுச்சேரி இடையே அரசு, தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்