தீபாவளி மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கி வருவதை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் ‘அகல் விளக்குகள்’ தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் முக்கிய பண்டிகைகளாக கொண்டாடப் படும் தீபாவளி பண்டிகை நவம்பர் 14-ம் தேதியும், கார்த்திகை தீப திருவிழா நவம்பர் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கு கிறது. நவம்பர் 29-ம் தேதி காலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, மக்கள் தயாராகி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் மண் பாண்ட தொழிலாளர்கள் உள்ள வேலூர் சூளைமேடு, குடியாத்தம், கே.வி.குப்பம், கணியம்பாடி, அணைக்கட்டு, மேலகுப்பம், ஒடுக்கத்தூர், பொய்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட பொருட்கள் தயாரிப் பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், பண்டிகை காலங் களுக்கு ஏற்றவாறு, களிமண்ணால் செய்யக்கூடிய பொருட்களை தயாரித்து அதை விற்பனை செய்து வருகின்றனர். விரைவில் தீபாவளி பண்டிகையும், அதை தொடர்ந்து கார்த்திகை தீபத் திருவிழா வர இருப்பதால் மண்பாண்ட தொழிலாளர்கள் தற்போது ‘அகல் விளக்குகள்’ தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் தரமான களிமண் கிடைக்காததால் எதிர் பார்த்த வியாபாரம் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வேலூர் சூளை மேடு பகுதியைச் சேர்ந்த மண் பாண்ட தொழிலாளி தியாகராஜன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, "வேலூர் சூளை மேடு பகுதியில் மண்பாண்ட தொழிலில் நேரடியாக 250 பேரும்,மறைமுகமாக 400-க்கும் மேற் பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கிட்டத்தட்ட 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட தொழி லில் தலைமுறை தலைமுறையாக ஈடுபட்டு வருகின்றனர். மண் பாண்ட தொழிலுக்கு தேவையான களிமண் வேலூர் அடுத்த கணியம் பாடி, ஏ-கட்டுப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிடைக் கிறது. இத்தொழிலில் ஈடுபடுவோ ருக்கு ஆண்டுக்கு 8 யூனிட் களிமண் வழங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
எங்களுக்கு 4 யூனிட் களிமண்ணே போதுமானது. 4 யூனிட் களிமண் ரூ.4,500-க்குகொள்முதல் செய்கிறோம். இதைக் கொண்டு சமையல் செய்ய தேவையான அடுப்பு, சட்டி, பானை, விநாயகர் சிலைகள், அகல் விளக்கு, பொங்கல் பானை, நவராத்திரி ஸ்பெஷல் கொலு பொம்மை உள்ளிட்ட மண்பாண்ட பொருட்களை தயாரித்து விற் பனைக்கு அனுப்புகிறோம்.
தற்போது, தீபாவளி பண்டி கையும், அதற்கு அடுத்ததாக தீபத்திருவிழா வர இருப்பதால் சூளைமேடு பகுதியில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் அகல்விளக்கு தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 1 லட்சத்துக்கும் மேலான அகல்விளக்குகள் தயாரித்துள்ளோம். 1 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை அகல் விளக்குகள் தயாரித்துள்ளோம்.
வேலூர் மாவட்டத்தில் தரமான களிமண் கிடைக்கவில்லை. பிறமாவட்டங்களில் தரமான களிமண் கிடைக்கிறது. ஆனால், அங்கு சென்று களிமண்ணை கொள்முதல் செய்ய எங்களுக்கு அனுமதியில்லை.
வேலூர் மாவட்ட நிர்வாகம் இதற்கான அனுமதியை வழங்க வேண்டும். அல்லது வேலூர் மாவட்டத்திலேயே தரமான களிமண் இருக்கும் இடத்தை ஆய்வு செய்து அங்கிருந்து களிமண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். தரமான களிமண் கிடைக்காததால் அகல்விளக்கு தயாரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த தொழிலை மட்டுமே நம்பியுள்ள எங்களுக்கு தரமான களிமண்ணை விலை குறைவாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கோரிக் கையாக உள்ளது" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago