மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது தமிழக அரசின் துணிச்சல் மிக்க நடவடிக்கை என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டப்பேரவை உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
"அரசுப் பள்ளிகளில் படித்த தமிழக மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் வகையில் 7.5. சதவீத இட ஒதுக்கீடு வழங்கத் தமிழக அரசு அரசாணை வழங்கியிருப்பதை மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.
தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு, ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் தாமதித்த நிலையில், சமூக நீதியைக் காப்பாற்றும் வகையில் தமிழக அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளதைத் துணிச்சலான நடவடிக்கை எனப் பாராட்டுகிறோம்."
» 7.5% உள் இட ஒதுக்கீடு மசோதா: ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்தார்
» நானும் அரசுப்பள்ளி மாணவன் தான்:7.5% உள் ஒதுக்கீடு அரசாணை குறித்து நெகிழ்ந்த முதல்வர் பழனிசாமி
இவ்வாறு தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் 7.5 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்குத் தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago