தமிழகத்தில் முக்கிய கோயில்களில் சித்த மருத்துவமனை தொடங்க அரசு திட்டம்: உயர் நீதிமன்றத்தில் தகவல்

By கி.மகாராஜன்

தமிழகத்தில் முக்கிய கோயில்களில் சித்த மருத்துவமனை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மதுரையைச் சேர்ந்த இந்திய மருத்து நலக் அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் மருத்துவர் ஜெயவெங்கடேஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வருமானம் வரும் 49 கோவில்களில் சித்த மருத்துவமனைகள் தொடங்கப்படும் என தமிழக அரசு 1970-ல் அரசாணை பிறப்பித்தது. ஆனால் இதுவரை 6 கோவில்களில் மட்டுமே சித்த மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அரசாணை அடிப்படையில் அனைத்து கோவில்களிலும் சித்த மருத்துவமனை அமைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் வாதிடுகையில், திருப்பதி கோவிலில் சித்த மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி உள்ளது என்றார்.

கூடுதல் அரசு வழக்கறிஞர் கே.பி.நாராயணகுமார் வாதிடுகையில், வடபழனி முருகன் கோவில், திருத்தனி, மருதமலை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் முருகன் கோவில்கள் மற்றும் ராமேஸ்வரம் கோவில்களில் சித்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து கோவில்களிலும் சித்த மருத்துவமனை அமைக்கும் திட்டமும் உள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், தமிழகத்தில் 6 கோவில்களில் சித்த மருத்துவமனைகள் எப்போது தொடங்கப்பட்டன? தமிழகத்தில் பிற கோவில்களில் சித்த மருத்துவமனைகள் தொடங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர், இந்து சமய அறநிலையத்துறை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ. 19-க்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்