தனியார் நிறுவனங்களால் தமிழ் நாடு மின்வாரியத்துக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக உடுமலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் மின்பார்வை பொறியாளர்கள் சங்கத்தினர் பேனர் வைத்துள்ளனர்.
உடுமலையில் தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் உள்ளது. அங்கு மின்பொறியாளர்கள் சங்கம் சார்பாக பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் ‘பறிபோகும் மின்வாரியம்’ என்ற தலைப்பில் தனியார் மின் உற்பத்தியாளர்களால் மட்டும் மின்வாரியத்துக்கு ரூ.1,60,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் ‘4 தனியார் நிறுவனங்களிடம் இருந்து 12 ஆண்டுகளில் தமிழ்நாடு மின்வாரியம் 4035.5 கோடி யூனிட் மின்சாரம் வாங்கியுள்ளது.
அதில் தனியார் நிறுவனங்கள் அடைந்த லாபம் மட்டும் ரூ.29,307 கோடி. 2016-ம் ஆண்டில் சாம்பல்பட்டி பகுதியில் யூனிட் ரூ.23.76, மதுரைபவர்ஹவுஸ்-ல் யூனிட் ரூ.26.17, பிபி நல்லூர் பகுதியில் யூனிட் ரூ.21.80 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முறைகேடுகள் குறித்து மக்களுக்கு தொடர்ந்து அடுத்தடுத்து தெரிவிக்கப்படும் என சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago