குப்பையில் தீ வைத்தபோது பட்டாசு வெடித்து 2 சிறுவர்கள் படுகாயம்: விருதுநகர் அருகே சோகம்

By இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் குப்பையில் கிடந்த பட்டாசு திரிக்கு தீ வைத்தபோது வெடி விபத்து ஏற்பட்டு 2 சிறுவர்கள் பலத்த காயமடைந்தனர்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் அஸ்வின் (8), பாலமுருகன் என்வரது மகன் மலையரசன் (9) ஆகியோர் அப்பகுதியில் உள்ள தீர்த்தகரை பகுதிக்கு இன்று காலை விளையாடச் சென்றுள்ளனர்.

அப்போது, அங்குள்ள குப்பையில் பட்டாசு கழிவு திரிகள் கிடந்துள்ளன. இதைப் பார்த்த சிறுவர்கள் இருவரும் குப்பையில் கிடந்த பட்டாசு திரிக்கு தீ வைத்துள்ளனர். அப்போது, கழிவு பட்டாசு திரிகள் திடீரென வெடித்துச் சிதறியுள்ளன. இதில், சிறுவர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுவர்கள் இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்