உயில் சாசனத்தில் கூறியபடி தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிய மகள்

By செய்திப்பிரிவு

கடலூர் தேரடித்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகசுந்தரம். இவர் வட்டாட்சியராக பணி புரிந்து கடந்த 1996ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். கடந்த 2019 நவம்பர் 17-ம் தேதி உயிரிழந்தார்.

அவரது இளைய மகள் கயல்விழிக்கு எழுதிய உயில் சாசனத்தில் நம்முடைய நன்செய் நிலத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை ஒவ்வொரு ஆண்டும் ரூ 50 ஆயிரத்தை என் மனைவி ஏ.ரமணி அம்மாளின் நினைவாக கடலூர்வட்டத்தில் இதய நோயினால் பாதிக்கப் பட்ட ஏழைகளுக்கு உதவிடும் பொருட்டு கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்திட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் ஆறுமுகசுந்தரத் தின் மகள் கயல்விழி தனது தந்தை எழுதிய உயில் சாசனத்திற்கு மதிப்பளித்து கடலூர் மாவட்டத்தில் உள்ள இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ. 50 ஆயிரத்துக்கான காசோ லையை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரியிடம் வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்