ஆந்திர மாநில வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் கவுன்டன்யா நதியில் 1,000 கன அடி வீதம் நீர்வர தொடங்கியுள்ளது. மோர்தானா அணையை பொது மக்கள் பார்வையிட தடை விதித்த துடன் மாவட்டத்தில் உள்ள அதிகா ரிகள் அடுத்த 15 நாட்களுக்கு தயார் நிலையில் இருக்கவும் ஆட்சியர்சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள் ளார்.
தமிழக- ஆந்திர வனப்பகுதியில் வரும் நாட்களில் அதிகளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித் துள்ளது. இதன் காரணமாக பாலாறு, பொன்னையாறு, குண் டாறு, கவுன்டன்யா மகாநதி, மலட் டாறுகளில் அதிகளவு நீர்வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. ஏற்கெனவே மாவட்டத்தின் முக்கிய நீர்த்தேக்க அணையான மோர்தானா அணை முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.
மோர்தானா அணையின் நீர் பிடிப்புப் பகுதியான ஆந்திர வனப்பகுதியில் பெய்த கன மழையால் நேற்று காலை 1,000 கன அடி வீதம் நீர்வரத்து இருந்தது. அணை நிரம்பியிருந்ததால் உபரி நீர் முழுமையாக அப்படியே கவுன் டன்யா ஆற்றில் வெளியேறியது. இதையடுத்து, மோர்தானா அணை மற்றும் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கேயுள்ள ஜிட்டப்பள்ளி பிக்-அப் அணையை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர், பொதுப்பணித் துறை நீர்வள ஆதார செயற்பொறியாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மாவட்டத்தில் பொதுப் பணித்துறை, தீயணைப்பு, வருவாய், சுகாதாரம், உள்ளாட்சி, காவல் துறை, உள்ளிட்ட முக்கிய துறைகளின் அரசு அதிகாரிகள் அடுத்த 15 நாட் களுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். அதிகாரிகள் தாழ்வானப் பகுதிகளை தொடர்ந்து கண்காணிப் பதுடன் ஏரிகளின் மதகுகள் சேதமாகாமல் இருக்கிறதா? என ஆய்வு செய்ய வேண்டும். ஏரிகளில், ஆக்கிரமிப்பு விவசாயிகளால் கரைகள் சேதமடைய வாய்ப்புள் ளதால் ஒவ்வொரு ஏரிகளையும் கண்காணிக்கும் வகையில் கிராமநிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர் கள் பணியில் இருக்க வேண்டும்.
மழைக்கால நிவாரண மையங்கள் தயாராக இருக்க வேண்டும். தாழ்வானப் பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருந்தால் அதுகுறித்து ஆட்டோக்களில் ஒலிபெருக்கி அல்லது தண்டோரா மூலம் எச்சரிக்க வேண்டும்.
போதுமான அளவுக்கு மணல் மூட்டைகளை இருப்பு வைத்திருக்க வேண்டும். நீர்நிலைகள் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக அதை அடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் முன்கூட்டியே பொக்லைன், மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
நீர்நிலை பகுதிகளில் பொது மக்கள் கூட்டம் கூடாமல் இருக்க காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். மறு உத்தரவு வரும்வரை மோர்தானா அணையை பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்படுகிறது’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago