"நடிகர்கள் சம்பளத்தை குறைப்பது அவர்களாக முடிவு செய்ய வேண்டிய விஷயம். அரசு இதில் நேரடியாக தலையிட்டு கூறுவதற்கு முகாந்திரம் இல்லை. தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், நடிகர் சங்கத்தினர் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும்" என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
சீறாப்புராணம் காப்பியம் தந்த தமிழறிஞர் அமுதகவி உமறுபுலவரின் 378-வது ஆண்டு பிறந்த தின விழா அரசு சார்பில் எட்டயபுரத்தில் உள்ள அவரது நினைவு மணிமண்டபம் வளாகத்தில் இன்று காலை நடந்தது.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உமறுப்புலவர் சங்க தலைவர் காஜா மைதீன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் இஸ்லாமிய பெருமக்கள் கலந்துகொண்டு உமறுப்புலவரின் நினைவிடத்தில் மலர் போர்வை சாத்தி புகழ் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, "நடிகர்கள் சம்பளத்தைக் குறைப்பது அவர்களாக முடிவு செய்ய வேண்டிய விஷயம். அரசு இதில் நேரடியாக தலையிட்டு கூறுவதற்கு முகாந்திரம் இல்லை. தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், நடிகர் சங்கத்தினர் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும்.
» சிறுவர்களின் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றும் இளைஞர்கள்: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர் அங்குள்ள சூழ்நிலையை பொருத்து விழாக்கால சிறப்பு அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
கரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விரைவில் நடைமுறைக்கு வரும் என்ற தகவல் வந்தவுடன் இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் தான் அனைவருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இதிலும் அரசியல் செய்கிறார். இதனை மக்கள் புரிந்து கொள்வார்கள்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago