சாகுபடி செலவைக் கூட எடுக்க முடியாத அவலம்: வரத்து அதிகரிப்பால் விலை போகாத தக்காளி

By பி.டி.ரவிச்சந்திரன்

தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் விளைவித்ததுக்குரிய செலவைக்கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், பழநி, தொப் பம்பட்டி, கள்ளிமந்தயம், வட மதுரை, அய்யலூர், வேட சந்தூர் பகுதிகளில் அதிக பரப் பில் தக்காளி சாகுபடி செய் யப்படுகிறது. தக்காளிக்கென ஒட்டன்சத்திரம், பழநி, அய்யலூர் ஆகிய ஊர்களில் மொத்த மார்க்கெட் உள்ளது. இங்கு விளைவிக்கும் தக்காளிகளை விவசாயிகள் மொத்தமாக விற் பனை செய்கின்றனர்.

கடந்த செப்.20-ம் தேதி ஒரு பெட்டி (14 கிலோ) தக்காளி ரூ.300-க்கு விற்பனையானது (ஒரு கிலோ ரூ.21.50). அப்போது வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.25 முதல் விற்பனையானது.ஆனால், கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. நேற்று மொத்த மார்க்கெட்டில் தக்காளி ஒரு பெட்டி ரூ.120-க்கு விற்பனையானது (ஒரு கிலோ ரூ.8.50). தற்போது வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனையாகிறது.

வடகிழக்குப் பருவமழை உரியநேரத்தில் தொடங்கியிருந்தால் தக்காளிச் செடிகள் பாதிப் புக்குள்ளாகி ஈரப்பதம் அதிகரித்து தக்காளிப் பழங்கள் செடியிலேயே வெடித்துச் சேதமடைந்திருக்கும். இதனால், மார்க்கெட்டுக்கு வரத்துக் குறைந்து விலை சீராக இருந்திருக்கும்.

ஆனால், வடகிழக்குப் பரு வமழை இன்னும் தொடங் கவில்லை. இதனால், தக்காளி விளைச்சலுக்குத் தேவைப்படும் அளவான நீர், செடியில் விளைந்த தக்காளி சேதமடையாமல் முழுமையாக அறுவடைக்கு வரும்நிலை ஆகியவற்றால் வரத்து அதிகரித்து விலை குறையக் காரணமாகிவிட்டது, என்கின்றனர் வியாபாரிகள்.

தக்காளி விவசாயி மூர்த்தி கூறுகையில்,

“தோட்டத்தில் இருந்து மார்க் கெட்டுக்கு தக்காளிகளைக் கொண்டுவர ஆகும் வாகனச் செலவு, விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு தரும் கமிஷன் ஆகியவற்றுக்கே அதிகம் செலவாகிறது. ஒரு கிலோ ரூ.10-க்கும் குறை வாகவே விற்பனையாவது விவசாயிகளுக்கு கட்டுபடியாகாத விலை. தக்காளிச் செடி நடவு, களை எடுப்பு, நீர்பாய்ச்சுதல், பராமரிப்பு என தோட்டத்தில் செய்த செலவை எடுக்க முடியாத நிலை உள்ளது. தக்காளி விலை வீழ்ச்சிக்கு மழை பெய்யாதது தான் காரணம். பெய்திருந்தால் தக்காளி வரத்துக் குறைந்து விலை அதிகரித்திருக்கும்,” என் றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்