ஜெ. மீது மனித உரிமை ஆணையத்தில் புகார்: கடலூர் எம்பி கே.எஸ்.அழகிரி பேட்டி

கடலூரில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக சார்பில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு வயதான பெண்களை அழைத்துவந்து, கடும் வெய்யிலில் காக்க வைத்த அதிமுகவினர் மீதும், ஜெயலலிதா மீதும் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யப்படும் என கடலூர் எம்பி கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

கடலூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாள ரான எம்.பி., கே.எஸ்.அழகிரி, செவ்வாய்க்கிழமை கடலூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழக முதல்வரின் சரியான நிர்வாகமின்மையால் தமிழக மின்வாரியம் ரூ.50 ஆயிரம் கோடி கடனில் தத்தளிக்கிறது. மேலும் இம்மாவட்டத்தில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்திலிருந்து தடையில்லா மின்சாரத்தை பெறும் தமிழக அரசு, அதற்குண்டான மின்கட்டணத் தொகையை செலுத்தவில்லை.

கடலூரில் ஜெயலலிதா பங் கேற்ற கூட்டத்துக்கு நெடுந் தொலைவிலிருந்து ஆண்களை யும் பெண்களையும் அழைத்து வந்து, சுட்டெரிக்கும் வெய்யிலில் பல மணிநேரம் காக்கவைத்துள்ள னர். அப்பெண்கள் அனைவரும் 100 நாள் வேலை உறுதித் திட்டத் தின் கீழ் வருமானம் பெற்றுவந் தவர்கள். அவர்களது வேலையை யும் கெடுத்ததோடு மட்டுமில்லா மல், வயதான பெண்களை சுட்டெரிக்கும் வெயிலில் காயவைத்த அதிமுகவினர் மீதும், ஜெயலலிதா மீதும் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யவுள்ளேன்.

திமுக, அதிமுக இரண்டுமே பச்சை சந்தர்ப்பவாத கட்சிகளா கும். மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் கட்சியோடு தேர்தலுக் குப் பிறகு கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்ற நிலையில் தான், இரு கட்சிகளும் தற்போது எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் இருக்கின்றன என்றார் கே.எஸ்.அழகிரி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE