காளையார்கோவிலில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மயானத்தில் கிராமமக்கள் காத்திருப்பு போராட்டம்

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கிராமமக்கள் மயானத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

காளையார்கோவில் ஊராட்சி செந்தமிழ்நகர் கிழக்கு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களுக்கு அப்பகுதியில் மயானம் உள்ளது. அந்த மயானத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

மேலும் மயானத்திற்கு செல்ல சரியான சாலை வசதியும் இல்லை.

இதையடுத்து மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மயானத்திற்கு செல்ல 20 அடி அகலத்திற்கு சாலை அமைத்து அரசு பதிவேட்டில் பதிய வேண்டுமென, அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

நடவடிக்கை இல்லாதநிலையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகரச் செயலாளர் வெற்றிவிஜயன் தலைமையில் கிராமமக்கள் மயானத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் வருவாய்த்துறையினர், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராடத்தை கைவிட்டு கிராமமக்கள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்