எந்த அறிகுறியும் இல்லாமல், பரிசோதனையும் செய்யாமல் எத்தனை பேருக்கு கரோனா வந்துசென்றது?- கண்டறியும் ஆய்வு தமிழகத்தில் தொடக்கம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் எந்த அறிகுறியும் காட்டாமல், எத்தனை பேருக்கு கரோனா வைரஸ் தொற்று வந்து சென்றுள்ளது என்பதை கண்டறியும் ஆய்வு தொடங்கியுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு இருக்கிறதா என்பதை சளி மாதிரியை எடுத்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது. இந்தியாவில் கரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டதா, எவ்வளவு பேருக்கு வந்துள்ளது என்பதைக் கண்டறிய சில மாதங்களுக்கு முன்பு இந்திய மருத்துவக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வு நடத்தியது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருவண்ணாமலை உட்பட நாடுமுழுவதும் 69 மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 12,405 ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில், 2,673 (21.5 சதவீதம்) பேருக்கு நோய் எதிர்ப்புசக்தி உருவாகியிருப்பது தெரியவந்தது. இரண்டாம் கட்ட ஆய்வில் சென்னையில் 421 பேரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் 141 (33.4) சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருந்தது. இதேபோல், சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 12,460பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்குஉட்படுத்தப்பட்டன. இதில், 21 சதவீதம் பேருக்கு (5-ல் ஒருவருக்கு) கரோனா தொற்றுக்கு எதிரானநோய் எதிர்ப்பு சக்தி உருவாகி யிருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை சார்பில் தமிழகம்முழுவதும் ஆய்வு தொடங்கியுள்ளது. இதற்காக, முன்பையில்உள்ள தனியார் நிறுவனத்துடன்ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 3,690, கோவையில்1,260, திருச்சியில் 1,140 என தமிழகம் முழுவதும் 26,640 பேரிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படவுள்ளது. இந்த ஆய்வுக்காக சென்னை, கோவை,சேலம், திருச்சி, மதுரை, நெல்லையில் உயர்ரக ஆய்வகக் கருவிகள்பயன்படுத்தப்படுகின்றன. இந்தஆய்வை வரும் நவ. 2-வது வாரத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் சராசரியாக எத்தனை பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது மாவட்ட வாரியாக கணக்கிடப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்