வெங்காயம் விலை உயர்வால் மதுரை ஹோட்டல்களில் ஆம்லேட் நிறுத்தப்பட்டுள்ளது.
மதுரைக்கு, ஆப்கானிஸ்தான், எகிப்து நாட்டில் இருந்து 70 டன் வெங்காயம் விற்னைக்கு வந்தது. ஆனாலும், வெங்காயம் விலை குறையாததால் பல ஹோட்டல்களில் ஆம்லேட் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை தொடருவதால் காய்கறிகள், வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது. நேற்று மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.80-க்கு விற்றப்பட்டது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்றது. சில்லறை விற்பனைக் கடைகளில் இதை விட கூடுதல் விலைக்கு வெங்காயம் விற்றதால் பொதுமக்கள் வாங்க முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர்.
ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகை நேரங்களில் வெங்காயத்தைப் பதுக்குவதால் இதுபோல் விலை உயர்வு ஏற்படுவதாகவும், தற்போது மழை பெய்வதால் உள்ளூர் உற்பத்தி மொத்தமாகக் குறைந்ததோடு வெளிமாநில வெங்காயம் வராததால் விலை கூடி வருவதாகவும் கூறப்படுகிறது.
மொத்த கொள்முதல் கடைகளில் விலை கூடியதால் அவர்களிடம் வாங்கி விற்பனை செய்யும் சிறு, குறு காய்கறி வியாபாரிகள் வெங்காயம் விலையை உச்சத்திற்கு உயர்த்திவிட்டனர்.
மதுரையில் சில்லறை விற்பனை கடைகளில் வெங்காயம் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒத்தக்கடைப்பகுதியில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.140-க்கும், சின்ன வெங்காயம் ரூ.150-க்கும் விற்பனையானது.
அதனால், பொதுமக்கள் வெங்காயம் வாங்குவதையே தற்போது தவிர்த்து வருகின்றனர். மதுரையில் பல ஹோட்டல்களில் வெங்காயம் விலை உயர்வால் ஆம்லேட் போடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் ஹோட்டல் முன் போர்டு வைத்து வெங்காயம் விலை உயர்வால் ஆம்லேட் போடுவது நிறுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் வெங்காயம் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளனர். நேற்று ஈரான், எகிப்து நாட்டு வெங்காயம் மதுரைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து 150 டன்னும், எகிப்து நாட்டில் இருந்து 32 டன்னும் பெரிய வெங்காயம் விற்பனைக்கு வந்தது.
மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் நேற்று முதலே ஆப்கானிஸ்தான் நாட்டு வெங்காயம் விற்பனை தொடங்கியது.
மதுரை அருகே கப்பலூரில் எகிப்து வெங்காயம் வந்து இறங்கியுள்ளது. அது இன்னும் விற்பனைக்கு வரில்லை. ஆப்கானிஸ்தான் வெங்காயம், நேற்று மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ70 முதல் ரூ.75-க்கு வியாபாரிகள் விற்றனர். ஆனால், வியாபாரிகளும், பொதுமக்களும் இந்த வெங்காயத்தை வாங்க பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago