குடியாத்தம் அருகேயுள்ள அரசுப் பள்ளியில் படித்த மாணவர் குணசேகரன், ‘நீட்' தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப் பிடம் பிடித்துள்ளார். கல் உடைக் கும் தொழிலாளியான தந்தை, தனது பூர்வீக சொத்தை விற்று அதில் கிடைத்த பணத்தில் படிக்க வைத்த தாக மாணவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் அதிகம் சேருவதற்காக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, பள்ளிகளில் சிறப்பாக படிக்கும் மாணவர்கள் தேர்வு செய் யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு நடைபெற்ற ‘நீட்' தேர்வில் அரசு சார்பில் அளிக்கப் பட்ட பயிற்சியில் பங்கேற்ற மாணவர் கள் பலர் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் இருந்து பயிற்சி பெற்ற மாணவர்களில் 4 பேர் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளனர். ராணிப்பேட்டை எல்எப்சி மேல் நிலைப் பள்ளி மற்றும் குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இருவர் 400-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதேபோல், வாலாஜா அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இருவர் 350-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், குடியாத்தம் அருகேயுள்ள டி.டி.மோட்டூர் அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 2017-18 கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவர் குணசேகரன், இந்தாண்டு நடைபெற்ற ‘நீட்' தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண வர் குணசேகரனை ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று பாராட்டி னார். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
‘நீட்' தேர்வில் அதிக மதிப்பெண் கள் பெற்றது குறித்து மாணவர் குணசேகரன் கூறும்போது, ‘‘கடந்த 2018-ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 1080 மதிப்பெண்கள் பெற்றதுடன் தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட பயிற்சியின் மூலம்‘நீட்' தேர்வு எழுதி 132 மதிப்பெண் கள் பெற்றேன்.
இந்த மதிப்பெண் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான தகுதி மதிப்பெண்ணாக இருந்தும் தரவரிசையில் வாய்ப்பு கிடைக்க வில்லை. இதையடுத்து, ஓராண்டு வீட்டில் இருந்தபடியே படித்து கடந்த 2019-ல் நடைபெற்ற ‘நீட்' தேர்வு எழுதியதில் 332 மதிப்பெண்களை பெற்றேன். அப்போதும், மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஓராண்டு வீணாகியதால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் ‘நீட்' பயிற்சி மையத்தில் சேர முடிவு செய்தேன்.
தனது தந்தை ராஜேந்திரன் கல் உடைக்கும் தொழிலாளி. அம்மா பழனியம்மாள் குடும்பத்தை கவனித்துக்கொள்கிறார். எனக்கு 5 சகோதரர்கள், ஒரு சகோதரி உள்ளனர் . பண வசதி இல்லாதததால் ‘நீட்' தேர்வு பயிற்சிக் காக பூர்வீக நிலத்தை விற்று அதில் கிடைத்த பணத்தில் பயிற்சிகட்டணம் ரூ.1 லட்சம், உணவுக் கட்டணம் ரூ.20 ஆயிரம் செலுத் தினோம்.
தங்குமிட வசதியை இலவ சமாக அளித்தார்கள். தற்போது அதிக மதிப்பெண் கிடைத்துள் ளதால் மருத்துவப் படிப்பில் சேர முடியும். தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்தால் முன்னணி மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்புள்ளது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago