பசுமைப் பண்ணை கடைகள் மூலம் நாளை முதல் சென்னையிலும், தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதலாகவும் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில்தான் அதிக அளவில் பெரிய வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் வெங்காயப் பயிர்கள் 75% அளவுக்கு அழிந்துவிட்டன.
இதனால், வெங்காயம் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. திருச்சி வெங்காய மண்டிக்கு தினமும் பெரிய வெங்காயம் 300 டன் அளவுக்கு விற்பனைக்குவரும். தற்போது 200 டன் அளவுக்கே விற்பனைக்கு வருகிறது.
இன்னும் 10 நாட்களில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.120-ஐ தொடும் என்கின்றனர் மொத்த விற்பனையாளர்கள்.
இந்நிலையில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வெங்காயத்தை கொள்முதல் செய்து பண்ணைப் பசுமை கடைகளில் விற்பனை செய்ய தமிழக முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, இன்று காலை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பசுமைப் பண்ணை கடைகள் மூலம் நாளை முதல் சென்னையிலும், தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதலாகவும் பெரிய வெங்காயம் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், சாமான்ய மக்களின் சிரமம் குறையும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago